Published:Updated:

நீலகிரி: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் புழக்கம்; 2 நாள்களில் 17 கடைகளுக்கு சீல், ரூ.2.5 லட்சம் அபராதம்!

பிளாஸ்டிக் ரெய்டு

ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் தடைசெய்யப்பட்டு பல இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்-கள் அமைக்கப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாக்க 19 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.

நீலகிரி: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் புழக்கம்; 2 நாள்களில் 17 கடைகளுக்கு சீல், ரூ.2.5 லட்சம் அபராதம்!

ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் தடைசெய்யப்பட்டு பல இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்-கள் அமைக்கப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாக்க 19 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.

Published:Updated:
பிளாஸ்டிக் ரெய்டு

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில், தமிழ்நாட்டில் முதன்முறையாக 20 ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் தடை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாத நிலையே நீடித்துவந்தது. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, நீலகிரியின் முன்னாள் ஆட்சியர் இன்னசெனட் திவ்யா பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் தடைசெய்யப்பட்டு பல இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்-கள் அமைக்கப்பட்டன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 19 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் ரெய்டு
பிளாஸ்டிக் ரெய்டு

இந்த நிலையில், அண்மைக்காலமாக கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தொடர் புகார்கள் குவிந்தன. அதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாள்களாகத் தொடர் ஆய்வில் ஈடுபட்டுவந்தனர். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள்மீது அபராதம் விதித்திருக்கின்றனர். கடைகளுக்கு சீல் வைத்திருக்கின்றனர்.

இது குறித்துப் பேசும் நீலகிரி வருவாய்த்துறையினர், ``கடந்த இரண்டு நாள்கள் நடத்திய ரெய்டில் மாவட்டம் முழுவதும் 17 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. 2 .56 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் ரெய்டு
பிளாஸ்டிக் ரெய்டு

நடமாடும் உணவக வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. 100 கிலோவுக்கு அதிகமான பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து ரெய்டு நடத்துவோம்" என்றனர்.