Published:Updated:

நெல்லை: சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் - விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்!

சாலைகளில் படுத்திருக்கும் கால்நடைகள்
News
சாலைகளில் படுத்திருக்கும் கால்நடைகள்

கால்நடைகள் வளர்ப்போர் மேய்ச்சலுக்கு வெளியே கொண்டு செல்லாமல் சாலைகளில் விரட்டி விடுகிறார்கள். மழைக் காலத்தில் தார்ச் சாலைகள் இதமாக இருப்பதால் கால்நடைகள் நடுரோட்டில் படுத்துக் கொள்வதால் விபத்துகள் நடக்கின்றன.

நெல்லை மாநகரில் சாலைகளைத் திரியும் கால்நடைகளால் தொடர்ச்சியாக வாகன விபத்துகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கடந்தாண்டு மேலப்பாளையம் பகுதியில் சாலைகளில் சென்ற கால்நடைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு மிரண்டு ஓடின.

விபத்து ஏற்படும் ஆபத்து
விபத்து ஏற்படும் ஆபத்து

அந்த சமயத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் மீது மாடுகள் பாய்ந்ததில், அவர் விபத்தில் சிக்கினார். வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே போல, பாளையங்கோட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் சாலையில் படுத்திருந்த கால்நடைகள் மீது மோதி உயிரிழந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாலைகளில் திரியும் கால்நடைகளால் நெல்லை மாநகரில் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு நடமாட முடியாத நிலைக்குச் சென்ற துயர சம்பவங்களும் இங்கு நடந்திருக்கின்றன. அதனால் சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று நெல்லை மாநகர எஸ்.டி.பி.ஐ சார்பாக சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

மிரளும் மாடுகள்
மிரளும் மாடுகள்

அதன் பின்னரும் கால்நடைகள் சாலைகளில் நடமாடுவது முழுமையாகத் தடுக்கப்படாததால், தொடர்ச்சியாக வாகன விபத்துகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதனால், அவற்றைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மீண்டும் மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மேலப்பாளையம் பகுதி செயலாளரான காதர் மீரான், ``கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் அதிகமான விபத்துகள் நடக்கின்றன. மேலப்பாளையம் பெரியதெரு அருகே இன்று கால்நடைகள் முட்டியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்தில் சிக்கிய முதியவர்
விபத்தில் சிக்கிய முதியவர்

கால்நடைகள் மூலம் வாகன விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருவதால், வாகன ஓட்டிகளிடம் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாத பகுதிகளில் சாலையின் நடுவில் படுத்திருக்கும் கால்நடைகளால் கனரக வாகனங்கள் கூட விபத்தில் சிக்குகின்றன. உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இது குறித்து நெல்லை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``சாலைகள் திரியும் கால்நடைகள் மாநகராட்சிப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கால்நடைகளையும், தெருநாய்களையும் பிடிக்க போதுமானதாக பணியாளர்கள் இல்லாததால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

சாலையை மறித்தபடி படுத்துக் கிடக்கும் கால்நடைகள்
சாலையை மறித்தபடி படுத்துக் கிடக்கும் கால்நடைகள்

மழை வெள்ளச் சேதம் தொடர்பான பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால் கால்நடைகள் பிடிக்க பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதோடு, பிடிக்கப்படும் கால்நடைகளை அடைத்து வைக்கக் கோசாலைகளில் போதுமான இடவசதி இல்லாததும் இந்தப் பணியைத் தொடர முடியாததற்குக் காரணம். இந்தக் குறைகள் விரைவில் சரிசெய்யப்பட்டு கால்நடைகள் மூலம் நடக்கும் விபத்துகளைத் தடுப்போம்" என்றனர்.