Published:Updated:

`1,800 செடிகள்; 194 ரகங்கள்!' - பயணிகளை வரவேற்கத் தயாராகும் ஊட்டி ரோஜா பூங்கா

ஊட்டி ரோஜா பூங்கா
ஊட்டி ரோஜா பூங்கா

கோடை சீசனை வரவேற்கும் வகையில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

சர்வதேச சிறப்பு வாய்ந்த சுற்றுலா நகரான ஊட்டிக்கு ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

ஊட்டி ரோஜா பூங்கா
ஊட்டி ரோஜா பூங்கா

கொதிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சமவெளி பகுதிகளிலிருந்து ஊட்டிக்கு வரும் பயணிகளுக்கு விருந்து படைக்க கோடை சீசனில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி, பழக் கணக்காட்சி உள்ளிட்ட கோடை விழா நிகழ்வுகளின் தேதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

தோட்டக்கலை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் புதுப்பொலிவு பெற்று பயணிகளை வரவேற்கத் தயாராகி வருகின்றன.

ஊட்டி ரோஜா பூங்கா
ஊட்டி ரோஜா பூங்கா

மலர் நாற்றுகள் நடவுப்பணி, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், பெரும்பாலான பூங்காக்களில் இன்னும் மலர்கள் பூக்கத் தொடங்கவில்லை.

`தெற்காசியாவின் மிகப்பெரிய தோட்டம்!'- சர்வதேச ரோஜா தினத்தைக் கண்டுகொள்ளாத ஊட்டி அதிகாரிகள்

இந்த நிலையில், நூற்றாண்டு ரோஜா பூங்காவில் முதல் பாத்திகளில் ரோஜாக்கள் மலரத் தொடங்கியுள்ளன.

ஊட்டி ரோஜா பூங்கா
ஊட்டி ரோஜா பூங்கா

இதுகுறித்து பூங்கா ஊழியர்கள்,``முதல் பாத்தியில் உள்ள 1,800 செடிகளில் 194 ரக ரோஜாக்கள் பூத்துள்ளன. பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் இந்த ரோஜாக்களைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள ரோஜா கண்காட்சி சிறப்பு கவனத்தைப்பெறும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு