Published:Updated:

சத்துணவில் வழங்கப்பட்ட அழுகிய முட்டைகள், கொந்தளித்த பெற்றோர்; விசாரணைக்கு உத்தரவு!

அழுகிய முட்டைகள் விநியோகம்
அழுகிய முட்டைகள் விநியோகம்

`அழுகிய முட்டைகளுக்கு மாற்றாகப் புதிய முட்டைகள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். அழுகிய ‌முட்டைகளை விநியோகம் செய்தது குறித்து‌ விசாரணை மேற்கொள்ளப்படும்.'

கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவும் நிறுத்தப்பட்டுள்ளது.

அழுகிய முட்டைகள் விநியோகம்
அழுகிய முட்டைகள் விநியோகம்

இந்தச் சூழலில், பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சத்துணவுக்கான பொருள்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள எருமாடு அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசால் சத்துணவுப் பொருள்களுடன் முட்டைகளும் வழங்கப்பட்டன. வழங்கிய முட்டைகளை வீட்டில் பயன்படுத்தியபோது அனைத்தும் அழுகியிருப்பது தெரியவந்தது. பலருக்கும் இதேபோல் அழுகிய முட்டைகளையே வழங்கியிருப்பதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

அழுகிய முட்டைகள் குறித்து நம்மிடம் பேசிய பள்ளி மாணவர் ஒருவரின் தந்தை, ``ரெண்டு வருஷமா ஸ்கூல்ல இருந்து முட்டை வருது; ஒரு பிராப்ளமும் இல்ல. ஆனா, இந்த டைம் கொடுத்த முட்டைகள் எல்லாமே கெட்டுப்போச்சு. எல்லாருக்குமே இதே மாதிரி ஆயிருக்கு. தூக்கி வீசிட்டோம்" என்றார்.

அழுகிய முட்டைகள் விநியோகம்
அழுகிய முட்டைகள் விநியோகம்

இந்த விவகாரம் குறித்துக் கூடலுார் வட்டார வளர்ச்சி அலுவலர், ``அனைத்து சத்துணவு மையங்களுக்கும் கடந்தவாரம் முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டன. தற்போது அனைத்து சத்துணவு மையங்களிலும் வைக்கப்பட்டுள்ள முட்டைகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அழுகிய முட்டைகளுக்கு மாற்றாகப் புதிய முட்டைகள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். அழுகிய ‌முட்டைகளை விநியோகம் செய்தது குறித்து‌ விசாரணை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு