Published:Updated:

வேளாங்கண்ணி: கடைகளில் அழுகிய மீன்கள், இறைச்சிகள் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

அழுகிய மீன்கள்

வேளாங்கண்ணி மீன்கடைகளில் அழுகிய மீன்கள், இறைச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

வேளாங்கண்ணி: கடைகளில் அழுகிய மீன்கள், இறைச்சிகள் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

வேளாங்கண்ணி மீன்கடைகளில் அழுகிய மீன்கள், இறைச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

Published:Updated:
அழுகிய மீன்கள்

வேளாங்கண்ணியில் தரமற்ற, அழுகிய 100 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளைப் பறிமுதல் செய்து, விற்பனை செய்த 10 கடைகளுக்கு தலா ரூ.10,000  வீதம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அழுகிய மீன்கள்
அழுகிய மீன்கள்

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வேளாங்கண்ணி பேருந்து நிலையம் முதல் கடற்கரை வரை இரண்டு புறமும்  ஏராளமான வறுவல் மீன் கடைகள்  செயல்பட்டுவருகின்றன. இங்கு தரமற்ற, அழுகிய, உபயோகத்துக்குப் பயன்படுத்த முடியாத மீன்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசியப் புகார் வந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் ஆறு நபர்கள்கொண்ட குழுவினர்  வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி கடற்கரை வரை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன்கள் தரமற்ற அழுகிய நிலையிலும், நீண்ட நாள்களான பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்க்கப்பட்ட நிலையிலும், குளிர்சாதன பெட்டியில் 10 -க்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளைப் பறிமுதல் செய்தனர்.

அழுகிய மீன்கள்
அழுகிய மீன்கள்

தொடர்ந்து கடை ஒன்றுக்கு ரூ.10 ,000 வீதம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உரிமையாளர்களை எச்சரித்தனர். இந்தச் சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.