Published:Updated:

பெரம்பலூர்: ஏரியில் கிடைத்த உருண்டை வடிவிலான படிமங்கள்! - டைனோசர் முட்டைகளா?

உருண்டை வடிவிலான படிமங்கள்
உருண்டை வடிவிலான படிமங்கள்

உருண்டை வடிவிலான படிமங்களை, வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். `இதை ஆய்வு செய்தால்தான் உண்மை என்ன என்று தெரியவரும்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் தோண்டத் தோண்ட `டைனோசர் முட்டைகள்’ போன்ற உருண்டைகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கத் தொடங்கியிருப்பதால் அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்படுகிறது.

உருண்டை வடிவிலான படிமங்கள்
உருண்டை வடிவிலான படிமங்கள்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசுப் பள்ளிக்கு அருகே இருக்கும் வெங்கட்டான் ஏரியில், குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தப் பணிகளுக்காக உள்ளூர் மக்கள் ஏரியிலுள்ள வண்டல் மண்ணைத் தோண்டியபோது, அதில் உருண்டை வடிவிலான படிமங்கள் சில கிடைத்தன. அவற்றைப் பார்த்த பலரும் அவற்றை டைனோசர் முட்டைகள் என்று சொல்ல, அந்தப் பகுதியைப் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ஏற்கெனவே சாத்தனூரில் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல கல் மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலமாக, அந்தப் பகுதி முந்தைய காலத்தில் கடலாக இருந்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உருண்டை வடிவிலான படிமங்கள்
உருண்டை வடிவிலான படிமங்கள்

இந்தநிலையில், இந்த முட்டைகள் மாமிச கார்னோட்டரஸ் (Carnotaurus), இலைகள் மட்டும் உண்ணும் சைவ சௌரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என அந்தப் பகுதியினர் சிலர் தெரிவிக்கிறார்கள். இங்கு கிடைத்த படிமங்களின் மூலம் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் டைசோனர்கள் பெருமளவில் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

அதேபோல, கடல்வாழ் உயிரினங்களின் படிமங்களும் பாசில்ஸ்களும், கடல் நத்தைகள், கடல் ஆமைகள், கடல் சங்கு ஆகியவற்றின் புதைபடிமங்களும் கிடைத்திருக்கின்றன. மேலும், இந்த உருண்டைகள், சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை எனவும் கூறப்படுகிறது. இந்த உருண்டைகளைப் பார்ப்பதற்காக அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இதற்கு முன்பு அரியலூர் மாவட்டம், செந்துறையில் 44 டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். ``அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை வரலாற்று ஆய்வாளர்கள் சொர்க்க பூமியாகக் கருதுகிறார்கள். கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டம், செந்துறையில் 44 டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. அவையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கல்மரம் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது.குன்னம் பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு மற்றொரு கல்மரம் கண்டெடுக்கப்பட்டது. இந்தப் பகுதி ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்பதற்குச் சான்றாக இருக்கிறது. இதைப் பாதுகாக்க வேண்டும். இந்தப் பகுதியை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்றனர்.

உருண்டை வடிவிலான படிமங்கள்
உருண்டை வடிவிலான படிமங்கள்
மருமகள் உயிருடன் இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய உறவுகள்! பெரம்பலூர் சர்ச்சை

உருண்டை வடிவிலான படிமங்களை வருவாய்த்துறையினர் கைப்பற்றி, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். `இவற்றை ஆய்வு செய்தால்தான் உண்மை என்ன என்று தெரியவரும்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள் சிலர். சில பகுதிகளிலுள்ள மண் வகைகள், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இது போன்று உருண்டையாக மாறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள். `அரசு உரிய நடவடிக்கை எடுத்து, ஆய்வு செய்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்கிறனர் அந்தப் பகுதியில் உள்ளவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு