Published:Updated:

மனைவியின் முதலாமாண்டு நினைவுநாளில் தற்கொலை செய்துகொண்ட பிரபல ரௌடி! - போலீஸ் விசாரணை

மரணம் ( சித்திரிப்புப் படம் )

மனைவியின் முதலாமாண்டு நினைவுநாளில் பிரபல ரௌடி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

மனைவியின் முதலாமாண்டு நினைவுநாளில் தற்கொலை செய்துகொண்ட பிரபல ரௌடி! - போலீஸ் விசாரணை

மனைவியின் முதலாமாண்டு நினைவுநாளில் பிரபல ரௌடி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
மரணம் ( சித்திரிப்புப் படம் )

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். பிரபல ரௌடியான இவர்மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரசாந்த்தின் மனைவி குளோரி. பிரசாந்த் அடிக்கடி சிறைக்குச் சென்று வந்ததால் மனமுடைந்த குளோரி, கடந்த ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மனைவியின் பிரிவால் பிரசாந்த் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் மனைவியின் முதலாமாண்டு நினைவுநாள் 18.9.2022-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அதற்கு உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.

தற்கொலை
தற்கொலை

அப்போது திடீரென பிரசாந்த், அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். வீட்டிலிருந்து மண்ணெண்ணெயை ஊற்றி பிரசாந்த் தீக்குளித்தார். அறையிலிருந்து புகை வருவதைப் பார்த்த உறவினர்கள் கதவை உடைத்து பிரசாந்தை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி பிரசாந்த் உயிரிழந்தார். இது குறித்து கோடம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.