Published:Updated:

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,242 கோடி மதிப்பீடு; பணிகள் நிறைவடைவது எப்போது? - ஆர்.டி.ஐ தகவல்

கோவை

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,242 கோடி மதிப்பீடு; பணிகள் நிறைவடைவது எப்போது? - ஆர்.டி.ஐ தகவல்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

Published:Updated:
கோவை

கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2011-ம் ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கோவையில் 139 கி.மீ தொலைவுக்கு மூன்று கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசனையும் நடத்தினர்.

கோவை மெட்ரோ ரயில் திட்டம்
கோவை மெட்ரோ ரயில் திட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்திருப்பதாகவும், 2027-ம் ஆண்டில் பணிகள் நிறைவடையும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து ஆர்.டி.ஐ-இல் தகவல்களை பெற்றுள்ள சமூக ஆர்வலர் தயானந்த் கூறுகையில், ``முடிவடைந்த பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கிற பணிகள், பரிந்துரைக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த விவரங்களை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கேட்டிருந்தேன்.

தயானந்த்
தயானந்த்

அதில் தான் விரிவான திட்ட அறிக்கைப்படி (DPR) கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், 2027-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று கூறியுள்ளனர்.

தமிழக அரசு ஒப்புதல் வழங்கியவுடன், மத்திய அரசின் நிதி ஒப்புதலுக்கு வழங்கப்படும். அதேபோல மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக சொல்லியுள்ளனர். ஆய்வுக்கு பிறகு அரசு ஒப்புதலுடன் மதுரை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வார்கள்.

மெட்ரோ
மெட்ரோ

சென்னையில் மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் பணிகள் 2026-ம் ஆண்டில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.” என்றார்.