Published:Updated:

`விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது!' - நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக, விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக, விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார். ஏற்கெனவே நடிகர் விஜய், ``தனது பெயரைப் பயன்படுத்திக் கூட்டங்களை நடத்தவும், மற்ற பணிகளை மேற்கொள்ளவும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும்" என வழக்கு தொடர்ந்திருந்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்,  ஷோபா, விஜய்
எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, விஜய்
அரசியல் களத்தில் நடிகர் விஜய்?! -  புஸ்ஸி ஆனந்துடன் டெல்லி பயணத்தின் பின்னணி

இது தொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், ``கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி நடைபெற்ற விஜய் மக்கள் இயக்க பொதுக்குழு கூட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, ஜெகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளான தங்களின் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டனர். அதைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தைக் கலைப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே, தற்போதைய சூழலில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை!" என எஸ்.ஏ.சந்திரசேகர் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது எனவும், இந்த பதில் மனுவுக்கு விஜய் தரப்பில் விளக்கமளிப்பதற்காக, அக்டோபர் 29-ம் தேதி விசாரணையைத் தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு