Published:Updated:

``ஆணவக் கொலைகள் ஆரோக்கியமான சமூகத்துக்கு ஏற்றதல்ல!" - சகாயம் ஐ.ஏ.எஸ்

அருண் சின்னதுரை
ஈ.ஜெ.நந்தகுமார்

`ஆணவக் கொலைகள் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்காது' என்று சகாயம் ஐ.ஏ.எஸ் வருத்தம் தெரிவித்தார்.

சகாயம் ஐ.ஏ.எஸ்
சகாயம் ஐ.ஏ.எஸ் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களின் குடும்பத்துக்கு நினைவுப் பரிசுகளை மக்கள் பாதை இயக்கம் வழங்கியது. இதில் சகாயம் ஐ.ஏ.எஸ் அதிகாரி கலந்துகொண்டு சிறப்பித்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை தியாகி ராமுத்தேவருக்கு புகழ் அஞ்சலியும் செலுத்தினார்.

சகாயம் ஐ.ஏ.எஸ்
சகாயம் ஐ.ஏ.எஸ்
ஈ.ஜெ.ந்ந்தகுமார்

பின்னர் செய்தியாளர்களிடம், "இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இருப்பது வருத்தமளிக்கிறது. இளைஞர்கள்தாம் சமுதாயத்தின் சொத்துகள். மதுவுக்கு அடிமையாவது சமுதாயத்துக்கு ஆரோக்கியம் அற்றது. மது, இளைஞர்களின் ஆற்றலைப் பிடுங்குகிறது.

நியூட்ரினோ திட்டம் என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு. மத்திய அரசின் நடவடிக்கை. அரசுப்பணியில் இருக்கிற நான் அதுபற்றிக் கருத்து கூறினால் விமர்சனமாகிவிடும்.

கொலைகள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பாக, ஆணவக் கொலைகள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஆணவக்கொலை ஆரோக்கியமான சமூகத்துக்கு ஏற்றதல்ல. ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் செய்வது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது.

சகாயம் ஐ.ஏ.எஸ்
சகாயம் ஐ.ஏ.எஸ்
ஈ.ஜெ.ந்ந்தகுமார்

பணியிட மாற்றம் செய்யும்போது மக்களுக்குத் தேவையானவற்றை செய்ய முடியாமல் போனால் அது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம்.

சமூக மாற்றத்துக்கான இயக்கமாக மக்கள் பாதை இயக்கத்தைப் பயன்படுத்தி வருகிறோம். சமூகத்தை தூய்மைபடுத்துவோம் நேர்மைபடுத்துவோம். தூய்மைபடுத்தப்பட்ட தமிழ்ச் சமூகம் நிச்சயம் நேர்மையான அரசியலை உருவாக்கும் என்று நம்புவோம்.

சகாயம் ஐ.ஏ.எஸ்
சகாயம் ஐ.ஏ.எஸ்
ஈ.ஜெ.நந்தகுமார்

மக்கள் பாதை இயக்கம் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களைக் கொண்டுள்ளது. 5 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளார்கள் இளைஞர்கள். மிக வலுவான செயல்பாடுகளை சமூகத்தில் செயல்படுத்த மக்கள் பாதை இயக்கம் செயல்படும்” எனத் தெரிவித்தார்.