Published:Updated:

`அவர்களுக்கு யார் உதவுவார்கள்?!’- சேலத்தில் ஆதரவற்றோரை நெகிழவைத்த தொழிலதிபர்

உணவு வழங்குதல்
உணவு வழங்குதல் ( எம். விஜயகுமார் )

நமக்கு வீடு, பொருளாதாரம் அனைத்தும் இருக்கிறது. ஆனால், சாலையோர வாசிகளுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் யார் இருக்கிறார்கள்?

''சாதாரண நாள்களில்கூட அவர்களுக்கு யாராவது உதவுவார்கள். ஆனால் இன்று, அசாதாரண சூழ்நிலையில் அவர்களுக்கு யார் உதவ முடியும் என நினைத்தேன். உடனே 500 பேருக்கு உணவும், வாட்டர் பாட்டிலும் தயார் செய்தேன். பிறகு, இயலாத மக்களுக்கு தேடிச்சென்று வழங்கினேன். அவர்கள், உணவுகளைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் பசியாறுவதைப் பார்த்து நான் சந்தோஷம் அடைந்தேன்.''

தண்ணீர் பாட்டில்
தண்ணீர் பாட்டில்
எம். விஜயகுமார்

பிரதமர் மோடியின் அழைப்பை அடுத்து நாடு முழுவதும் மக்கள் இன்று சுய ஊரடங்கைக் கடைபிடித்தனர். டீக்கடை முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்தும் மூடிக்கிடக்கிறது. தெருக்களெல்லாம் வெறிச்சோடியுள்ளது. இச்சூழலில், சாதாரண மக்களின் யாசகத்தை நம்பி வாழக்கூடிய தெருவோர வாசிகள், மனநலம் பாதித்த மனிதர்கள், ஆதரவற்ற முதியோர்கள் நிலை பரிதாபத்திற்குரியது.

இதை உணர்ந்த சேலம் நீலநாயக்கன்பட்டி ஜீ.ஜீ.ஃபேஷன்ஸ் உரிமையாளர் கண்ணன், மக்கள் வெளியே வராத நிலையில் இவர்களுக்கு எப்படி யாசகம் கிடைக்கும்? காசு இருந்தாலும் உணவகங்கள் மூடிக்கிடக்கும் நிலையில் எப்படிச் சாப்பிடுவார்கள்? பசியால் இவர்கள் வாடிக்கிடப்பார்களே என்பதை தாயுள்ளதோடு உணர்ந்து, உடனே தன் நண்பர்களையும் விரும்பமுள்ள ஊழியர்களையும் வரவழைத்து, உணவும் தண்ணீரும் தயார் செய்துள்ளார்.

உதவி
உதவி
எம். விஜயகுமார்

அதை காரில் ஏற்றிக்கொண்டு சேலம் மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நான்கு ரோடு, அஸ்தம்பட்டி என சேலம் மாநகராட்சி முழுவதும் இயலாத மக்களை தேடிச்சென்று உணவு வழங்கினார். உணவகங்கள் இல்லாத நிலையில், குழந்தைகளோடு பசியோடு சாலையோரம் பூட்டப்பட்ட கடைகளுக்கு முன்பும், மரத்தடி நிழலிலும், பேருந்து நிழற்கூடத்திலும் காத்திருந்தவர்களிடம் கண்ணன் உணவு பொட்டலங்களைத் கொடுத்துள்ளார்.

உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்ட அவர்கள், மகிழ்ச்சியோடு கைகூப்பி நன்றி தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி ஜீ.ஜீ.ஃபேஷன்ஸ் உரிமையாளர் கண்ணன், ``இது நான் திடீரென எடுத்த முடிவு. நமக்கு பசிப்பது போலத்தானே அனைவருக்கும் பசிக்கும் என்பதை உணர்ந்தேன். நமக்கு வீடு, பொருளாதாரம் அனைத்தும் இருக்கிறது. ஆனால், சாலையோர வாசிகளுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் யார் இருக்கிறார்கள்?

கண்ணன்
கண்ணன்

சாதாரண நாள்களில்கூட அவர்களுக்கு யாராவது உதவுவார்கள். ஆனால், இன்று அசாதாரண சூழ்நிலையில் அவர்களுக்கு யார் உதவ முடியும் என நினைத்தேன். உடனே உணவும், தண்ணீரும் தயார் செய்தேன். இயலாத மக்களுக்கு தேடிச்சென்று வழங்கினேன். அவர்கள் உணவைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் பசியாறுவதைப் பார்த்து நான் சந்தோஷம் அடைந்தேன். இது என்னால் முடிந்த சிறிய உதவி'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு