Published:Updated:

`லாக்-டவுண்.. தனிமை.. மனநலன் முக்கியம் பாஸ்..!’ -களமிறங்கிய பெரியார் பல்கலைக்கழக உளவியல் துறை

மனநலன்
மனநலன்

கொரோனா வைரஸைவிட, இந்த மாதிரியான பாதிப்புகள் பெரும்பாலான மக்களிடம் ஏற்பட்டால் பல்வேறு வகைகளில் சிக்கலை உண்டாக்கும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் மனநலம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸின் சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு வைரஸ் பரவலின் வேகம், பிற நாடுகளில் உள்ள மக்களின் இறப்பு விகிதம் குறித்த செய்திகள், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களிடம் நேரடி தொடர்பில் இருந்ததாகக் குடும்பங்களுடன் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சூழல் என பல்வேறு வகைகளில் மன உலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
எம். விஜயகுமார்

அந்த வகையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மக்களின் மனநலம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், மூன்று பேராசிரியர்கள் கொண்ட குழுவை உருவாக்கித் தொலைபேசி வாயிலாக கவுன்சிலிங் வழங்கி வருகிறது.

பேராசிரியர் கதிரவன்
பேராசிரியர் கதிரவன்

மனநலம் தொடர்பான கவுன்சலிங் வழங்கி வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைத் தலைவர் கதிரவனிடம் பேசினோம். ``தற்போது இருக்கக்கூடிய சுகாதார இக்கட்டான சூழலில், நம் அனைவருக்குமான சமூகப் பொறுப்பு என்பது ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அந்த வகையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அறிவுறுத்தலின் பேரில், பல்கலைக்கழக உளவியல் துறையின் மூன்று பேராசிரியர்கள் கொண்ட கவுன்சலிங் குழு அமைக்கப்பட்டு செயலாற்றி வருகிறோம்.

மனிதனின் அடிப்படை இயல்புகளில் மனநலம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்துவது பயமும் பதற்றமும். இந்த உணர்வுகள் மனதில் அதிகரிக்கும்போது மனிதன் அசாதாரண நிலையை அடையக்கூடும். இவற்றைப் போக்கும் விதமாக மனநலனைப் பராமரிப்பது தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தொலைபேசி வாயிலாக கவுன்சலிங் வழங்கி வருகிறோம்.

மனிதனின் அடிப்படை உணர்வுகளான கோபம், அழுகை, சிரிப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு நம் உடலில் வேதிப் பொருள்களின் சுரப்பு ஏற்படும். தொடர்ச்சியாக ஒருவர் கோபமாக இருக்கிறார் எனில், அவருக்குக் குறிப்பிட்ட வேதிப்பொருளின் சுரப்பு அதிகமாகி வேறுவிதமான உடலியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பெரும்பாலும், லாக்டவுண் சூழல் பலரின் அன்றாட நடைமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. இது அவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. அதனால், கோபமாக உள்ளவர்களை நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்க அறிவுறுத்துகிறோம். அனைவரிடமும் செல்போன் உள்ளதால் இந்தப் பரிந்துரை சாத்தியமானது. மன அழுத்தத்தில் உள்ளவர்கள் இறுக்கமான முக பாவனையுடன் இருப்பார்கள். அவர்களை நன்றாக சிரிக்குமாறு கூறுகிறோம். சாதாரணமாகவே நாம் சிரிக்கும்போது உடலில் பல்வேறு தசைகள் இயங்குவதால் புத்துணர்ச்சி ஏற்படும். இது முக இறுக்கத்தைக் குறைப்பதோடு ஆரோக்கியமான மனநிலைக்கு நம்மைக் கொண்டு செல்லும்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். மதம் தொடர்பான நம்பிக்கை உள்ளவர்கள் அது தொடர்பான நூல்களைப் படிக்கலாம். மூச்சுப் பயிற்சியில் ஈடுபடலாம். நாம் கொட்டாவி விடும்போது மூளை முழுவதுமாக ஓய்வு நிலைக்குச் செல்கிறது. அப்போது வாயை முழுவதும் திறப்பதால் வாய் வலிக்க நேரிடும். மூளையை சில நிமிடங்களுக்கு முழு ஓய்வு நிலைக்குக் கொண்டு சென்று புத்துணர்வு அடைய, கண்களை மூடி வாயை ஒருபுறமாக அகலமாக திறக்க, மன அழுத்தம் உடனடியாக குறையும். இசைப் பிரியர்கள் தங்களுக்குப்  பிடித்தமான இசையைக் கேட்கலாம்.

மனநலன்
மனநலன்

இதுபோன்ற செயல்களை கவுன்சலிங் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தும்போது, அவர்களின் மனதை பயம், பதற்றம் ஆகியவற்றிலிருந்து திசைதிருப்ப உதவியாக இருப்பதோடு தைரியத்தையும் ஏற்படுத்தலாம். அதோடு, தொலைபேசி கவுன்சலிங் வாயிலாக உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் சமூக விலகல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களைக் கொண்டு சேர்க்கிறோம். சுமார், ஒரு நபரிடம் மட்டும் 20 முதல் 25 நிமிடங்கள் உரையாடுகிறோம் என்பதால், இந்த முயற்சி நல்ல பலனை அளிக்கும்.

மனநலன்
மனநலன்

மேலும், காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொலைபேசி வாயிலாக மனநலம் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டறிந்து அதற்கான தீர்வை அளித்து வருகிறோம். பொதுமக்கள் மனநலம் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின், 9443496299, 9994620123, 8012698558 ஆகிய எண்களுக்கு தொடர்புகொண்டு பயனடையலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு