Published:Updated:

கோயில்பட்டியில் தண்ணீர் குடித்து 20 பேர் பலி.. புகார் அளித்தும் அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்!

தண்ணீர்த் தொட்டி

தங்கள் ஊருக்கு காவேரி நீரைக் குடிநீராக அமைத்துத் தருமாறு கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்கள். குடிநீரில் அளவுக்கதிகமாக உப்பு இருப்பதால், ஊரிலுள்ள அனைவரும் கிட்னி பிரச்னையால் பாதிக்கப்பட்டுவருவதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கோயில்பட்டியில் தண்ணீர் குடித்து 20 பேர் பலி.. புகார் அளித்தும் அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்!

தங்கள் ஊருக்கு காவேரி நீரைக் குடிநீராக அமைத்துத் தருமாறு கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்கள். குடிநீரில் அளவுக்கதிகமாக உப்பு இருப்பதால், ஊரிலுள்ள அனைவரும் கிட்னி பிரச்னையால் பாதிக்கப்பட்டுவருவதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள்.

Published:Updated:
தண்ணீர்த் தொட்டி

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த நாவினிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த நா.கோயில்பட்டி கிராமத்தில், சுமார் 3,000 பேர் வசிக்கின்றனர். ஊரில் உள்ள ஆண் பெண் அனைவரும் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டுள்ளார்கள். காலையில் வயலுக்குச் செல்லும் இவர்கள், பொழுது சாய்ந்துதான் வீடு திரும்புகிறார்கள். முழுநேரமும் வயலிலேயே இருக்கும் மக்கள், தங்கள் உடல்நலன் குறித்து போதிய அக்கறையில்லாமலும் விழிப்புணர்வில்லாமலும் வாழ்ந்துவருகிறார்கள்.

நா.கோயில்பட்டி கிராமம்
நா.கோயில்பட்டி கிராமம்

கடந்த ஒரு வருடத்தில், 20-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளார்கள். அவ்வூர் மக்கள் பலரும் தொடர்ந்து ஒரே பாதிப்பால் மரணமடைந்தும், அதற்கான காரணத்தை அறிய முன்வரவில்லை.

தாங்கள் குடிக்கும் நீரில் அளவுக்கு அதிகமாக உப்பு இருப்பதைப் பொருட்படுத்தாமல், அதையே குடித்துவந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, அவ்வூரில் மருத்துவ முகாம் ஒன்று அரசு சார்பில் நடந்துள்ளது. அந்த முகாமில் தங்களைப் பரிசோதித்துக் கொண்டபோதுதான், உடம்பில் அளவுக்கதிகமாக உப்புச்சத்து இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின்னர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்துள்ளனர். அதன்பிறகும் பலர் சிறுநீரக செயலிழப்பால் மரணமடைந்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளி செல்லும் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. 8 வயது சிறுவனுக்கு உப்புச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதாக சோதனை முடிவுகள் வெளிவந்துள்ளதையடுத்து அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்தப் பிரச்னையை இப்படியே விட்டால் தீர்வு பிறந்துவிடாது என்று முடிவுசெய்த மக்கள், தங்கள் ஊருக்கு காவேரி நீரைக் குடிநீராக அமைத்துத் தருமாறு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். குடிநீரில் அளவுக்கதிகமாக உப்பு இருப்பதால், ஊரிலுள்ள அனைவரும் கிட்னி பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். நாள்கள் கடந்தும், அந்த மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

கழிவுநீர்
கழிவுநீர்

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பேசும்போது, "எங்கள் ஊர் மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கும் ஏழைகள். அதிகாரிகளிடம் குடிதண்ணீர் அமைத்துத் தருமாறு கேட்டோம், அவர்கள் மினரல் வாட்டர் வண்டி வருது அத வாங்கிக் குடிங்கன்னு சொல்றாங்க. பணம் இருக்கிறஙவங்க வாங்கலாம். நாங்க அன்றாடக் கூலி வேலை செய்றவங்க. மண்ணுல முதலீடு செஞ்சு காத்திருக்கோம். தினமும் மினரல் தண்ணீர் எல்லாம் எங்களால் வாங்க முடியாது. நாங்களும் நிறைய முயற்சி எடுத்துப் பார்த்துவிட்டோம். ஊர் வரைக்கும் அதிகாரிங்க வர்றாங்க. எங்க ஊர் கிளார்க், அவங்களைச் சமாளித்து, சரிசெய்ய விடாமல் அனுப்பிவிடுகிறார். எங்க ஊர் கிளார்க் இதுவரைக்கும் ஊருக்குன்னு எதுவுமே செஞ்சதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொங்கல் டைம்ல, அதாவது வருடத்திற்கு ஒருமுறை மட்டும் ஊரு பக்கம் வருவாரு. அதுவும் வரிவசூல் செய்ய. அந்த வேலை முடிஞ்சதும் அடுத்த பொங்கல்தான் வருவாரு. எங்க ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து ஆர்.ஓ வாட்டர் ஏற்பாடு செய்யலாம்னு பார்த்தாலும், அதுக்கும் அஞ்சு லட்சம் வரும்னு சொல்றாங்க. கண்டிப்பா அவ்வளவு பணம் எங்களால ரெடி பண்ண முடியாது. அரசாங்கம் எங்க கஷ்டத்தை புரிஞ்சு முயற்சி செய்தா, காவேரித் தண்ணீரை இந்த ஊருக்கு குடிதண்ணீரா வழங்க முடியும்" என்கிறார் வருத்தத்தோடு.

அர்ஜுனனின் மனைவி.
அர்ஜுனனின் மனைவி.

தொடர்ந்து அம்மக்களிடம் பேசுகையில், "இந்த ஊர்ல இருந்து இந்தத் தண்ணிய குடிக்கவும் பயமா இருக்கு. இதை விட்டு வெளியே போறதுக்கும் எங்ககிட்ட வசதி இல்ல. என்ன பண்ணப் போறோம்னு தெரியல" என வேதனை தெரிவிக்கிறார்கள்.

50 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் கிட்னி பிரச்சனையால் இறந்துள்ளார்கள். ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் கிட்னி செயலிழந்து இறந்தது அனைவரின் மனத்திலும் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சில தினத்திற்கு முன்பு, கிட்னி செயலிழப்பு காரணத்தால் இறந்த அர்ஜுனனின் வீட்டை பார்க்கச் சென்றிருந்தோம். அர்ஜுனனின் மனைவியிடம் பேசியபோது, '' கிட்னி கோளாறால் கடைசியாகப் போன உயிர் என் கணவனின் உயிராக இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் என் மகன், அவன் அப்பாவுக்கு கொள்ளிவைத்தது எந்த ஒரு குடும்பத்திலும் இனி வரக்கூடாது என்றார் ''தந்தையை இழந்த தன் மகள், மகனுடன்.

அந்த ஊர் கிளார்க் இளையராஜாவிடம் பேசினோம். ''அந்த ஊரு தண்ணி எல்லாம் நல்லாதான் இருக்கு. தொடர்ந்து இறக்கிறார்கள் என்றால் அதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கும். தண்ணீர் ரொம்ப சுத்தமாகத்தான் இருக்கு. நான் அதிகாரிகளை வைத்து டெஸ்ட் பண்ணிட்டேன். தண்ணி ரொம்ப நல்ல தண்ணி. மக்கள் சும்மா இதைக் காரணம் சொல்றாங்க’’ என்றார்.

ஊர் மக்கள் குடிக்கும் தண்ணீரைப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளார்கள். சோதனையின் முடிவில் தண்ணீரில் 1232 mg உப்பு இருப்பது தெரியவந்துள்ளது. (500mg உப்பு மட்டுமே இருக்க வேண்டும்)

மனு அளிக்கும் மக்கள்
மனு அளிக்கும் மக்கள்

கொஞ்சம்கூட ஏற்க முடியாத அளவு உப்பு உள்ள தண்ணீரை மக்கள் குடித்துவருகிறார்கள். சமீபத்தில், அமைச்சர் ஒருவர் மாணவர்களின் உடல் நலம் கருதி ஒவ்வொரு வகுப்பு முடியும்போதும் தண்ணீர் குடிக்க அனுமதிக்குமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இங்குள்ள மாணவர்கள் இந்தத் தண்ணீரைக் குடித்தால் பாதிப்புதான்.

இதுவரை கிட்னி செயலிழப்பால் இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்துபோயிருக்கிறார்கள். கடைசியாக இறந்த அர்ஜுனனோடு இந்தப் பட்டியல் முடிவது அரசின் செயலைப் பொறுத்தே உள்ளது. இனி, கிட்னி செயல் இழப்பால் ஒரு உயிர்கூட போகக்கூடாது என்பதே அம்மக்களின் பிரார்த்தனையாகவும் அரசாங்கத்திடம் வைக்கும் வேண்டுகோளாகவும் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism