Published:Updated:

`நாய்களைப் பழக்கி கடமான் வேட்டை!'- அதிரடி காட்டிய நீலகிரி வனத்துறை

poachers& forest department

நான்கைந்து நாய்களை வேட்டைக்குப் பழக்கி மான் உள்ளிட்ட விலங்குகளைக் கொன்று இறைச்சியைப் பயன்படுத்துகின்றனர்.

`நாய்களைப் பழக்கி கடமான் வேட்டை!'- அதிரடி காட்டிய நீலகிரி வனத்துறை

நான்கைந்து நாய்களை வேட்டைக்குப் பழக்கி மான் உள்ளிட்ட விலங்குகளைக் கொன்று இறைச்சியைப் பயன்படுத்துகின்றனர்.

Published:Updated:
poachers& forest department

ஊட்டியில் ஒரு கும்பல் மானை வேட்டையாடியதாக இரண்டு நாள்களுக்கு முன்பு வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் ஒன்று வந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து, அந்தக் கும்பலை நெருங்கி மானை வேட்டையாடிய 4 பேர்கொண்ட அந்தக் கும்பலை கைது செய்து மான் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர். வனச்சட்டத்தின் அடிப்படையில் வேட்டையாடிய நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

forest office
forest office

வேட்டைக் கும்பல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வன அலுவலர் குருசுவாமி, ``நீலகிரியில் சமீப காலமாக வன விலங்குகள் வேட்டையாடப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. அதே சமயம் வேட்டைக் கும்பலும் அதிகரித்துள்ளது. வன விலங்குகளுக்கு விஷம் வைப்பது, சுருக்கு வலை வைப்பது, வேட்டையாடுவது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதேபோல் ஊட்டி அருகில் உள்ள சோலூர் பகுதியைச் சேர்ந்த இயேசுதாஸ், கிருஷ்ண மூர்த்தி, பசுவராஜ், வெங்கட்ராஜ் ஆகிய நான்கு பேர் தங்களது வளர்ப்பு நாய்க்குப் பயிற்சி அளித்து கடமானை வேட்டையாட பயன்படுத்தியுள்ளனர். மானின் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

poachers & forest department
poachers & forest department

முதல் முறையாக இப்படியொரு சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளதால் இவர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காடு மற்றும் காட்டுயிர்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினோம். தொடர்ந்து இந்தச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்தால் வனச்சட்டத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்," என்றார்.

இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், ``இந்தப் பகுதியில் சிலர் நான்கைந்து நாய்களை வேட்டைக்குப் பழக்கி மான் உள்ளிட்ட விலங்குகளைக் கொன்று இறைச்சியைப் பயன்படுத்துகின்றனர்" என்றனர்.