Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: `என்னை கவனிக்க யாருமில்லை..!’-வாட்டிய தனிமை... விபரீத முடிவெடுத்த கல்லூரி தூய்மைப் பணியாளர்

தற்கொலை
தற்கொலை

``தன்னோட தனிமையை மறக்க ஸ்டூடன்ட்ஸ்கிட்ட ரொம்ப அன்பா நடந்துக்குவாங்க. கொரோனா வந்ததும் சரியா காலேஜ் நடக்கலை. ரொம்ப தனிமையா இருக்கறதா அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க."

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள மிஷனரிஹில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி [59]. திருமணமாகாத இவர், ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவந்தார்.

தற்கொலை
தற்கொலை
Representational Image (Pixabay)

இந்தநிலையில், நேற்று கல்லூரி ஸ்டோர் ரூமில் தூக்கில் தொங்கியபடி ராஜாமணியின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர் ஒருவர், கல்லூரி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். கல்லூரி நிர்வாகம் சார்பில் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்விடத்துக்கு வந்த ஊட்டி பி1 காவல்துறையினர், ராஜாமணியின் உடலைக் கைப்பற்றி ஊட்டியிலுள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

ராஜாமணி தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ராஜாமணியின் தற்கொலை குறித்து நம்மிடம் பேசிய கல்லூரிப் பணியாளர் ஒருவர், ``இந்த அம்மாவுக்கு காலேஜ்தான் உலகம். கல்யாணம் பண்ணிக்கலை. ரத்தச் சொந்தமுன்னு பெருசா யாரும் இல்லை. ரொம்ப அமைதியானவங்க.

தற்கொலை
தற்கொலை

தன்னோட தனிமையை மறக்க ஸ்டூடன்ட்ஸ்கிட்ட ரொம்ப அன்பா நடந்துக்குவாங்க. கொரோனா வந்ததும் சரியா காலேஜ் நடக்கலை. ரொம்ப தனிமையில இருக்கறதா அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. சில மாசத்துக்கு முன்னாடி கோவையில இருக்குற உறவினர் வீட்டுக்குப் போனபோது இந்த அம்மாவுக்கு கொரோனா வந்து தனிமைப்படுத்திவெச்சிருந்தாங்க. அதுலருந்து குணமடைஞ்சும் வந்தாங்க. ஆனாலும் அவங்ளைத் தனிமை விடலை. என்னை யாரும் கவனிக்கலை, கவனிக்கலைனு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஆனா திடீர்னு இப்படிச் செய்வாங்கன்னு நாங்க யாரும் எதிர்பாக்கவே இல்லை" எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு