Published:Updated:

தஞ்சாவூர்: `என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள்!’ தூய்மைப் பணியாளர்களை நெகிழ வைத்த அரசுப் பள்ளி

தேசியக் கொடியை ஏற்றும் தூய்மைப் பணியாளர்

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர்கள், நெகிழ்ந்து நன்றி என்றார்கள். `இன்று மட்டுமல்ல என்றும் போற்றப்பட வேண்டியவர்கள் நீங்கள்’ எனப் பாராட்டி வாழ்த்தியதில் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.’’

தஞ்சாவூர்: `என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள்!’ தூய்மைப் பணியாளர்களை நெகிழ வைத்த அரசுப் பள்ளி

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர்கள், நெகிழ்ந்து நன்றி என்றார்கள். `இன்று மட்டுமல்ல என்றும் போற்றப்பட வேண்டியவர்கள் நீங்கள்’ எனப் பாராட்டி வாழ்த்தியதில் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.’’

Published:Updated:
தேசியக் கொடியை ஏற்றும் தூய்மைப் பணியாளர்

கும்பகோணத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அதன் தலைமையாசிரியர் துாய்மைப் பணியாளர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து தேசியக் கொடியை ஏற்ற வைத்து கெளரவப்படுத்தியுள்ளார். அவரின் இந்தச் செயல் பலராலும் பாராப்பட்டு வருகிறது.

சுதந்திர தினவிழா
சுதந்திர தினவிழா

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் செயல்பட்டு வருகிறது அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி. பழமையான இந்தப் பள்ளியில் கொரோனா பரவுதலைத் தடுக்கும் வகையில் அரசு அறிவுறுத்தலைக் கடைப்பிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில், பள்ளித் தலைமையாசிரியர் சாரதி, என்.சி.சி ஆசிரியர் இளையராஜா மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில், பெண் தூய்மைப் பணியாளர் ஒருவரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து மரியாதை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் பேசினோம்.``நாட்டின் 74 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. எங்க பள்ளியிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

கும்பகோணம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றும் ரமா, ராஜசேகர் ஆகிய இருவரை சிறப்பு அழைப்பாளர்களாகப் பள்ளியின் தலைமையாசிரியர் சாரதி அழைத்திருந்தார். அவர்கள் பள்ளிக்கு வந்ததுமே முதலில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பின்னர், தேசியக் கொடியை ஏற்றுவதற்கு தலைமை ஆசிரியர் துாய்மைப் பணியாளர் ரமாவை அழைத்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ரமா அப்போது, `என்னையா தேசியக் கொடியை ஏற்றச் சொல்கிறீர்களா?’ எனக் கேட்டார். `ஆமாம், நீங்கதான் கொடியை ஏற்ற வேண்டும்’ எனக் கூறி, தேசியக் கொடியை ஏற்ற வைத்தார். இதனால், நெகிழ்ச்சியடைந்த ரமா முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர், தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்’’ என்றனர்.

தூய்மைப் பணியாளர்
தூய்மைப் பணியாளர்

இதுகுறித்து தலைமையாசிரியர் சாரதி கூறுகையில், ``கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் டாக்டர்களுக்கு நிகராகப் போராடுபவர்கள் துாய்மைப் பணியாளர்கள். கொரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயமான சூழ்நிலையிலும் தங்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் பணி செய்து ஊரைத் தூய்மையாகப் பராமரித்து வருகின்றனர். இதனால் நோய் பரவுவதல் தடுக்கப்படுகிறது.

தூய்மைப் பணியாளர்களின் பணிகள் என்பது போற்றப்பட வேண்டியது. அவர்களால்தான் எங்கள் பள்ளி வளாகம் தூய்மையாக இருக்கிறது. அப்படிப்பட்ட மதிப்புமிக்க செயலைச் செய்யும் தூய்மைப் பணியாளர்களைக் கெளரவப்படுத்த வேண்டும் என நினைத்தோம். அதன்படி அவர்களை அழைத்து வந்தது தேசியக் கொடியை ஏற்ற வைத்தோம். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர்கள், நெகிழ்ந்து நன்றி என்றார்கள். `இன்று மட்டுமல்ல என்றும் போற்றப்பட வேண்டியவர்கள் நீங்கள்’ எனப் பாராட்டி வாழ்த்தியதில் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’’ என்றார்.