Published:Updated:

`சரவணபவன்’ ராஜகோபால் காலமானார் - தனியார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!

ராஜகோபால்
ராஜகோபால்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் காலமானார்!

சென்னையில் மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு கிளைகளைப் பரப்பியிருக்கும் `சரவண பவன்' ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், பிரின்ஸ் சாந்தகுமாரைப் படுகொலை செய்த வழக்கில் அவர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.

ராஜகோபால்
ராஜகோபால்

ராஜகோபாலுக்கு 2 மனைவிகள் இருந்தபோதிலும் மூன்றாவதாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஜீவஜோதியின் தந்தை சரவணபவனில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இந்தத் திருமணத்துக்கு இடையூறாக இருப்பார் எனக் கருதியதால் கொடைக்கானல் மலைப்பாதையில் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொல்லப்பட்டார்.

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு, பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராஜகோபால், அவரின் மேலாளர் டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்ச்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கு விசாரணையின் முடிவில், 2004-ம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌திக்கப்பட்டது.

`ஜூலை 7-ம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும்!’
உச்ச நீதிமன்றம்

தனக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் ராஜகோபால். இதை விசாரித்த நீதிமன்றம், 10 ஆ‌ண்டு ‌சிறைத்த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரிப்பதாக அறிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் ராஜகோபால். அங்கும் தண்டனையை உறுதி செய்யப்பட்தோடு, `ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும்' எனக் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தனர் நீதிபதிகள்.

ஆனால், உடல்நிலையைக் காரணம் காட்டிச் சரணடைவதில் சிக்கல் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனாலும், அவர் சரணடைய வேண்டும் என்பதை உறுதிப்படத் தெரிவித்தது நீதிமன்றம். செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியோடு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்தான் அவரது உடல் நிலை மிக மோசமாக இருப்பதாகவும் அவரைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ராஜகோபால்
ராஜகோபால்

இதைத் தொடர்ந்து அரசு மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டுக்கொண்ட நீதிபதிகள், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று அவர் வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அடுத்த கட்டுரைக்கு