Published:Updated:

`அந்த நல்ல செய்திக்காக நானும் காத்திருக்கிறேன்’ - சுர்ஜித் மீட்புப் பணிகள் குறித்து சத்யராஜ்

தமிழகம் முழுவதில் உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகளில் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தால், நடுக்காட்டுப்பட்டியைச்சுற்றியுள்ள கிராம மக்கள் யாரும் நேற்று தீபாவளிப்பண்டிகையை கொண்டாடவில்லை.

சத்யராஜ்
சத்யராஜ்

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் மூடப்படாமலிருந்த ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. `மீண்டு வா சுர்ஜித்’ `#prayforsurjeeth" என்று தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீட்புப் பணிகள்
மீட்புப் பணிகள்

சுமார் 60 மணி நேரத்தையும் கடந்து, மீட்புப் பணி 2வது அதிவேக ரிக் இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற்றுவருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், சம்பவ இடத்துக்குச்சென்று, பார்வையிட்டு குழந்தையின் தாய், தந்தைக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், கமல்ஹாசன், ஸ்டாலின், திருமாவளவன், தமீமுன் அன்சாரி உள்ளிட்ட பலரும் குழந்தை சுர்ஜித் மீட்கப்படவேண்டும் என்று வேண்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

குழந்தை சுர்ஜித் உடல் நல்லடக்கம்! - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்

தமிழகம் முழுவதில் உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகளில் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தால், நடுக்காட்டுப்பட்டியைச்சுற்றியுள்ள கிராம மக்கள் யாரும் நேற்று தீபாவளிப்பண்டிகையை கொண்டாடவில்லை. இந்நிலையில் `சுர்ஜித் நிச்சயம் மீட்கப்படுவான்’ என்று நடிகர் சத்யராஜ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

சத்யராஜ்
சத்யராஜ்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,``வணக்கம். 2 வயது குழந்தை சுர்ஜித் நிச்சயமாக மீட்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். மிகவும் வேதனையான ஒரு நிகழ்வு. நிச்சயமாக அந்த குழந்தை மீட்கப்பட வேண்டும். அந்த நல்ல செய்திக்காக அனைவருடனும் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன். நம்பிக்கையோடு" என்று தெரிவித்துள்ளார்.