Published:Updated:

சாத்தூர்: அடிப்படை வசதிகள் கோரி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்!

போராட்டம்

சாத்தூர் கல்லூரியில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாணவ-மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் பொருளியல் உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 750 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், ``கல்லூரியில் குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்" எனக் கல்லூரி மாணவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அறிவித்திருந்தனர்.

சாத்தூர்: அடிப்படை வசதிகள் கோரி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்!

மாணவர்களின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு அலுவலர்கள், காவல்துறையினர் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்களின் கோரிக்கைகளை விரைவில் செய்து தருவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாகியும் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கல்லூரி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், கோரிக்கைகளை நேரடியாக அரசுக்கு தெரியப்படுத்திடும் வகையிலும் கல்லூரி மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, தகவலறிந்த காவல்துறையினர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரிராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை

இதில், கல்லூரியில் அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்யும் விதமாக மாணவர்களின் கோரிக்கைகளை விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் கல்லுரி மாணவ, மாணவிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.