Published:Updated:

`நான் அதை கண்டுக்கிறதே இல்லை’ -வங்கியின் சொத்து விற்பனை அறிவிப்புக்கு கே.சி.பழனிசாமியின் ரியாக்‌ஷன்

 கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி ( நா.ராஜமுருகன் )

செந்தில் பாலாஜியே இவரை எதிர்த்து போராட்டம் நடத்தித்தான், ஜெயலலிதா கவனத்துக்கு போய், அரசியலில் உயரம் பெற்றார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு யார் கேட்டாலும் லட்சம் லட்சமாக அள்ளிக் கொடுத்த அவர், கடந்த சில வருடங்களாக பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூர் மாவட்ட தி.மு.க முக்கியப் புள்ளியான கே.சி.பழனிசாமி பல வங்கிகளில் பெற்ற கடனை அடைக்காததால், பாரத ஸ்டேட் வங்கி, அவரது சொத்துகளை விற்பனைக்காக அறிவித்திருப்பது, கரூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர்
கரூர்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்ட தி.மு.க-வில் ஒருகாலத்தில் அசைக்க முடியாத சக்தியாக கோலோச்சியவர் கே.சி.பழனிசாமி. கரூர் தொகுதி எம்.பி-யாக இருந்தவர். காவிரியில் மணல் அள்ளும் தொழில் மூலம், பொருளாதார நிலையில் உயர்ந்தார். அதன் பிறகு, பல தொழில்களில் கால்பதித்தார். அதற்காக, வங்கிகளில் கடன் பெற்றார். அப்படி வாங்கிய வங்கிக் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட ரூ.197.79 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்வதாக கோவை பாரத ஸ்டேட் வங்கி, விற்பனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், கே.சி.பழனிசாமி மீண்டும் லைம்லைட்டுக்குள் வந்திருக்கிறார்.

கரூர்: தரம் குறைந்த நிலக்கரி; பல கோடி ரூபாய் ஊழல்?! - டி.என்.பி.எல் ஆலை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்

கரூர் தொகுதி தி.மு.க முன்னாள் எம்.பி-யாகவும், அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் இருந்த கே.சி.பழனிசாமி, தற்போது தி.மு.க சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு, கரூர் மாவட்டம், மாயனூரில் கே.சி.பி பேக்கேஜிங்ஸ் என்ற சிமென்ட் கம்பெனிகளுக்குச் சாக்குப்பை உற்பத்தி செய்துதரும் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. புதுச்சேரியில் தொழில் நிறுவனம் உள்ளது. அதோடு, மில்களும் உள்ளன. தவிர, கரூரில் வீடு உள்ளிட்ட சொத்துகள் உள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டு கரூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, ஐந்து ஆண்டுகள் கரூர் எம்.பி-யாக இருந்தார். அதன் பிறகு, 2009-ம் ஆண்டு கரூர் தொகுதி எம்.பி தேர்தலில் போட்டியிட்டபோது, இந்திய அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு காட்டி, எம்.பி வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு காட்டியதில் 2-வது இடத்தில் இருந்தார். ஆனால், அந்தத் தேர்தலில், அ.தி.மு.க முன்னாள் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரையிடம் தோல்வியடைந்தார். அதன் பிறகு, 2011-ம் ஆண்டு, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார். அதன் பிறகு, கடந்த 2016-ம் நடைபெற்ற அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் போட்டியிட்டு, அப்போதைய அ.தி.மு.க வேட்பாளரான செந்தில் பாலாஜியிடம் தோல்வியடைந்தார்.

 கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி
நா.ராஜமுருகன்

செந்தில் பாலாஜியே இவரை எதிர்த்து போராட்டம் நடத்தித்தான், ஜெயலலிதாவின் கவனத்துக்கு போய், அரசியலில் உயரம் பெற்றார். அப்படிப்பட்ட கே.சி.பி-க்கு சில வருடங்களாக தொழில்களில் பலத்த அடி, நஷ்டம். கோயில் கும்பாபிஷேகத்துக்கு யார் கேட்டாலும் லட்சம் லட்சமாக அள்ளிக் கொடுத்த அவர், கடந்த சில வருடங்களாக பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தார். இந்தநிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரின் பெயரிலும், அவரின் மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி பெயர்களிலும் உள்ள சொத்துகளை அடமானம் வைத்து, வங்கிகளில் ரூ.200 கோடிக்கு மேல் கடன் பெற்றிருந்தார். இந்தநிலையில், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் ரூ.197 கோடி மதிப்புள்ள சொத்துகளின் விற்பனை அறிவிப்பை, கோவை ஸ்டேட் வங்கி நாளிதழ்களில் வெளியிட்டிருக்கிறது.

`சிபாரிசு செய்த செந்தில் பாலாஜி முதல் தம்பியை நலம் விசாரிக்காத சசிகலா வரை!?' கழுகார் அப்டேட்ஸ்

பாரத ஸ்டேட் வங்கி ரூ. 81,00,54,930, கனரா வங்கி ரூ. 57,16,63,451, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.35,39,55,747, ஐ.டி.பி.ஐ ரூ.24,22,26,555 என ரூ.197,79,00,683 சொத்துகள் விற்பனைக்கு வந்துள்ளன. கரூர் வைஸ்யா வங்கி, கடனில் பிணையப்படுத்துதலில் முன்னுரிமை பிரச்னை இருப்பதால், அது மட்டும் விற்பனையில் சேர்க்கப்படவில்லை என அந்த விற்பனை அறிவிப்பில் வங்கி கூறியுள்ளது.

இது குறித்து, கே.சி.பழனிசாமியிடம் பேசினோம். ``இது பேங்க் வழக்கமாக பண்றதுதான். நாங்க அதை கண்டுக்கிறதே இல்லை" என்று சாதாரணமாகச் சொன்னார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு