Published:Updated:

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து மாணவன் பலி... டியூஷன் சென்டரில் சிறுநீர் கழிக்க சென்றபோது பரிதாபம்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை

ராமநாதபுரம் அருகே டியூஷன் சென்டருக்கு சென்ற பள்ளி மாணவன் சிறுநீர் கழிக்கச் சென்றபோது கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து மாணவன் பலி... டியூஷன் சென்டரில் சிறுநீர் கழிக்க சென்றபோது பரிதாபம்

ராமநாதபுரம் அருகே டியூஷன் சென்டருக்கு சென்ற பள்ளி மாணவன் சிறுநீர் கழிக்கச் சென்றபோது கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Published:Updated:
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை

ராமநாதபுரம் அருகே அத்தியூத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் கோபாலகிருஷ்ணன். காரிக்கூட்டம் பாத்திமா நகரில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள். மகன் எழிலரசன் (11), மற்றும் மகள் இருவரும் ராமநாதபுரம் தனியார் பள்ளியில் படித்து வந்தனர். பள்ளி முடிந்து தினமும் மாலை அண்ணன், தங்கை இருவரும் டியூசனுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளி முடிந்து அண்ணன் தங்கை இருவரும் டியூசனுக்கு சென்றுள்ளனர்.

இரவு டியூஷன் முடிந்து பிள்ளைகளை அழைத்து வருவதற்காக கோபாலகிருஷ்ணன் டியூஷன் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது மகள் மட்டும் வாசலில் காத்து நின்றுள்ளார். எழிலரசன் குறித்து மகளிடம் அவர் கேட்டபோது சிறுநீர் கழிப்பதற்காக மாடியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளதாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் கழிவறைக்குச் சென்ற மகன் கீழே வராததால் சந்தேகம் அடைந்த கோபாலகிருஷ்ணன் மாடிக்கு சென்றுள்ளார்.

கேணிக்கரை காவல் நிலையம்
கேணிக்கரை காவல் நிலையம்

அங்கு கழிவறை தொட்டி உடைந்து கிடப்பதே பார்த்து தன்னுடைய மகன் உள்ளே விழுந்திருப்பானோ என்ற சந்தேகத்தில் கழிவறை தொட்டிக்குள் இறங்கி பார்த்துள்ளார். அவர் சந்தேகப்பட்டபடி எழிலரசன் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து கழிவு நீர் தொட்டியில் இருந்து எழிலரசனை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்.

அப்போது மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் இறந்த மகனின் உடலை பார்த்து கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது‌.

இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்து கோபாலகிருஷ்ணனுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர்.