Published:Updated:

அரசு சைக்கிள் விலை ரூ.200... பள்ளியில் வாங்கிய கையோடு விற்றுச் செல்லும் மாணவர்கள்! - என்ன காரணம்?

அரசு சைக்கிள் விலை ரூ.200

மிதிவண்டிகளை வாங்கிய மாணவ, மாணவிகள் பலர் வாங்கிய அன்றே விற்பனை செய்துவிட்டுச் செல்கின்றனர்.

அரசு சைக்கிள் விலை ரூ.200... பள்ளியில் வாங்கிய கையோடு விற்றுச் செல்லும் மாணவர்கள்! - என்ன காரணம்?

மிதிவண்டிகளை வாங்கிய மாணவ, மாணவிகள் பலர் வாங்கிய அன்றே விற்பனை செய்துவிட்டுச் செல்கின்றனர்.

Published:Updated:
அரசு சைக்கிள் விலை ரூ.200

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில், நீலகிரியில் நடப்பு கல்வியாண்டுக்கான இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அண்மையில் தொடங்கிவைத்தார். தற்போது பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், மிதிவண்டிகளை வாங்கிய மாணவ, மாணவிகள் பலர் வாங்கிய அன்றே விற்பனை செய்துவிட்டுச் செல்கின்றனர்.

இலவச சைக்கிள்
இலவச சைக்கிள்

இது குறித்து நம்மிடம் பேசிய பள்ளி மாணவ, மாணவியர் சிலர், ``மலைப்பகுதியான ஊட்டியில் சைக்கிள்களை எல்லா இடத்திலும் பயன்படுத்த முடியாது. ஸ்கூலுக்கே சைக்கிளை ஓட்டி வர முடியாது. அதனால்தான் வீட்டுக்குக்கூட எடுத்துச் செல்லாமல் விற்பனை செய்கிறோம். 200, 300 ரூபாய்க்குத்தான் வாங்குகிறார்கள்" என்றனர்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன், ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது இலவச மின்விசிறிக்கு மாற்றாக மின் அடுப்பு நீலகிரிக்கு மட்டும் வழங்கப்பட்டது. அதேபோல் சைக்கிள்களைப் பயன்படுத்த முடியாத பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாற்று திட்டத்தை அறிமுகப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். அரசின் இலவச சைக்கிளை விலை கொடுத்து வாங்கும் சிலர் கேரளா மற்றும் சமவெளிப் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர்" என்றார்.