Published:Updated:

``மருமகளே; என் மகனுடன் தினமும் பேச வேண்டும்!" - மாணவிகளைக் கட்டாயப்படுத்திய அரசுப் பள்ளி ஆசிரியை

பள்ளி ( மாதிரிப் படம் )

மாணவியை `மருமகளே' என்று அழைத்ததுடன், தன் மகனுடன் நாள்தோறும் பேச வேண்டும். `இரவில் என் கணவரை நினைத்துக்கொண்டுதான் தூங்க வேண்டும்' என மாணவிகளிடம் அரசுப் பள்ளி ஆசிரியை பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

``மருமகளே; என் மகனுடன் தினமும் பேச வேண்டும்!" - மாணவிகளைக் கட்டாயப்படுத்திய அரசுப் பள்ளி ஆசிரியை

மாணவியை `மருமகளே' என்று அழைத்ததுடன், தன் மகனுடன் நாள்தோறும் பேச வேண்டும். `இரவில் என் கணவரை நினைத்துக்கொண்டுதான் தூங்க வேண்டும்' என மாணவிகளிடம் அரசுப் பள்ளி ஆசிரியை பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பள்ளி ( மாதிரிப் படம் )

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணிதப்பாட முதுகலை ஆசிரியையாகப் பணியாற்றிவருபவர் சாந்திப்பிரியா. மாணவி ஒருவரிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்துகொண்டதாகவும், வேதியியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமரவைத்ததாகவும், பாடம் நடத்தாமல் குடும்ப விஷயங்களைப் பேசுவதாகவும் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.

``மருமகளே; என் மகனுடன் தினமும் பேச வேண்டும்!" - மாணவிகளைக் கட்டாயப்படுத்திய அரசுப் பள்ளி ஆசிரியை

அதேபோல மாணவி ஒருவரை `மருமகளே' என்று அழைத்ததுடன், அவர் மகனிடம் பேசச் சொல்லி அவரைக் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்குத் தொடர்புகொண்டு பாட விஷயமாகப் பேச வேண்டும் என்று கூறிவிட்டு, பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பேசிவந்ததாகச் சொல்லப்படுகிறது.

அழைப்பை ஏற்க மறுக்கும் மாணவிகளிடம், `தேர்வு மதிப்பெண்களில் கைவைப்பேன்' என்று மிரட்டியிருக்கிறார். அத்துடன் மாணவிகள் தன்னுடைய காலில் விழுந்து `ப்ளீஸ்' என்று கெஞ்சினால்தான் பாடம் நடத்துவேன் என்றும் கூறியிருக்கிறார். இதன் உச்சகட்டமாக மாணவிகள் ஒவ்வொரு நாள் தூங்கும்போதும் அந்த ஆசிரியையின் கணவரை நினைத்துக்கொண்டுதான் தூங்க வேண்டும் என்று கூறியதாக சாந்திப்பிரியாமீது அடுக்கடுக்கான புகார்கள் கல்வித்துறைக்குச் சென்றன.

இவரின் நடவடிக்கையால் பள்ளியின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதுடன் பள்ளியில் அசாதாரண சூழல் ஏற்படுவதாக ஆசிரியர்களும் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், பள்ளியில் தனது சாதியைக் காரணம் காட்டி சக ஆசிரியர்கள் தன்னை வன்கொடுமை செய்ததாக சாந்திப்பிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி கூறுகையில், ``ஆசிரியை சாந்திப்பிரியாமீது ஏற்கெனவே பல புகார்கள் உள்ளன. ஜல்லிப்பட்டி பகுதியில் செயல்பட்டுவந்த பள்ளியில் பணியாற்றியபோது, தலைமை ஆசிரியரைச் செருப்பால் அடித்திருக்கிறார். சக ஆசிரியர், மாணவர்களை செல்போனில் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்திருக்கிறார்.

போலீஸ்
போலீஸ்

ஒரு மாணவியை `மருமகளே' என அழைத்ததுடன், தன் மகனிடம் செல்போனில் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதனால், அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அந்த மாணவியிடம் பேசிய ஆடியோ ரெக்கார்டிங்கை வைத்து இதை உறுதிசெய்திருக்கிறோம். தன் கணவரை நினைத்துக்கொண்டுதான் தூங்க வேண்டும் என்று கூறியதும் விசாரணையில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
சித்திரிப்புப் படம்

இந்த நிலையில், தன்னை சாதிரீதியாக சக ஆசிரியர்கள் தீண்டாமையைப் பின்பற்றுவதாக சாந்திப்பிரியா போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதால், அவரைப் பணிநீக்கம் செய்யாமல் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறோம். விசாரணை அனைத்தும் முடிவுற்ற பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.