Published:Updated:

`தாய் மொழியில் படிப்பதால் சுயமாகச் சிந்திக்கிறோம்' - மயில்சாமி அண்ணாதுரை!

தாய் மொழியில் படிப்பதால் சுயமாகச் சிந்திக்கிறோம். சர்வதேச நாடுகள் திரும்பிப் பார்க்கும் வகையில் நம் ஆராய்ச்சி இருக்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை கண்டறிந்தது. அதையடுத்து உலகின் மற்ற நாடுகள் அனைத்தும் மீண்டும் நிலவுக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரு முடிவெடுப்பதற்கு இந்தியா பெரும் உந்துசக்தியாக இருந்தது.

மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை
ஆர்.எம்.முத்துராஜ்

வரும் 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருக்கும் சந்திராயன் 2 விண்கலம் நிலவில் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய உதவியாக இருக்கும். விண்வெளி சுற்றுலா என்பதையும் தாண்டி நிலவுக்குச் சுற்றுலா செல்லலாமா என்பதற்கான முயற்சியும் நடந்து வருகிறது.

50 ஆண்டுகளுக்கு முன் ஆம்ஸ்ட்ராங் முதன் முதலாக நிலவில் இறங்கியதால் அமெரிக்கா அறிவியல் தொழில்நுட்பத்தில் துடிப்பாக வளர்ந்தது. இப்போது நாம் விண்வெளியில் இறங்க உள்ள இடம் இதுவரை யாரும் இறங்காத இடம். இது முக்கிய மைல் கல்லாக இருக்கும். தாய் மொழியில் நாம் படிப்பதால் சுயமாகச் சிந்திக்கிறோம். சர்வதேச நாடுகள் திரும்பிப் பார்க்கும் வகையில் நம் ஆராய்ச்சி இருக்கும்.

மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை
ஆர்.எம்.முத்துராஜ்

விண்வெளி தொழில்புரட்சியில் இந்தியாவுக்கு அதிக பலன் கிடைக்கும். இதைக் கண்டு பல நாடுகளும் இந்தியாவைப் பின்பற்றும். வருங்காலத்தில் இந்திய மாணவர்கள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அவர்களும் ஒரு பெரிய விண்வெளி விஞ்ஞானியாக வர முடியும்" எனத் தெரிவித்தார்.