Published:Updated:

`அயர்லாந்து வரை சென்ற தமிழக விநாயகர் சிலைகள்!' - மாமல்லபுரம் சிற்பி பகிரும் அனுபவங்கள்

விநாயகர் சிலை
விநாயகர் சிலை

எத்தனை பேரின் கண்பட்டும் கரையாத தொப்பையும், தொப்பைவரை நீண்டிருக்கும் துதிக்கையும் சிறுவர்களை ஈர்க்கும். வீரம், அமைதி, ஞானம், சந்தோஷம் என அனைத்து உணர்வுகளும் ஒருங்கிணைந்த உருவம்... விநாயகர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது. கொழுக்கட்டையும் சுண்டலும் சாப்பிடுவது, ஊர்வலம் போவது, பிள்ளையாரப்பா என கோஷமிடுவது எல்லாம் தாண்டி, தெருவின் முனையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் விநாயகரைப் பார்க்கும்போது மனதில் தங்கும் அமைதியை வார்த்தைகளில் சொல்ல முடியுமா?! யானை முகமும், வலப்புறம் உடைந்த தந்தமும் பல கதைகளைச் சொல்லும்.

எத்தனை பேரின் கண்பட்டும் கரையாத தொப்பையும், தொப்பைவரை நீண்டிருக்கும் துதிக்கையும் சிறுவர்களை ஈர்க்கும். வீரம், அமைதி, ஞானம், சந்தோஷம் என அனைத்து உணர்வுகளும் ஒருங்கிணைந்த உருவம்... விநாயகர்.

விநாயகர் சிலை
விநாயகர் சிலை

அன்பும் அரவணைப்பும் தீர்க்கமாய்த் தெறிக்கும் கண்கள், ஆசீர்வாதம் அளிக்கும் கைகள், அமர்ந்திருக்கும் லாகவம் என நாம் ரசித்து ரசித்துப் பார்க்கும் ஒவ்வொரு விநாயகர் சிலைக்குப் பின்னும் ஓர் உருவாக்கக் கதை இருக்கும். கோயில்களிலும் பிற இடங்களிலும் இருக்கும் விநாயகர் கற்சிலைகள் ஒரு கலைஞனின் பக்தியும் பக்குவமும் சரியான பதத்தில் கலந்து பார்த்துப் பார்த்து செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு பல சிற்பங்களை நேர்த்தியாக வடிவமைத்து, அயர்லாந்து வரை நம் சிற்பக்கலையைக் கொண்டு சென்றுள்ள மாமல்லபுரம் சிற்பி டி.பாஸ்கரனிடம், அவரது விநாயகர் சிற்பங்கள் உருவாக்க அனுபவங்கள் குறித்துப் பேசினோம்.

``அயர்லாந்தில் ஒரு கலைப் பூங்காவுக்காகச் செய்த பெரிய விநாயகர் சிலைகள், என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. மொத்தம் ஐந்து விநாயகர் சிலைகள். ஒவ்வொன்றும் வீணை, புல்லாங்குழல், மத்தளம் என ஒவ்வோர் இசைக் கருவியை வைத்திருப்பது போன்ற தோற்றம். 8 அடிக்கு உயர்ந்த, பெரிய சிலைகள் அவை. அந்தச் சிலைகளை செதுக்கி வடித்து அயர்லாந்து அனுப்பியது, பெண்ணின் முதல் பிரசவ அனுபவம் போல, எங்களால் மறக்கவே முடியாத அனுபவமானது. விநாயகர் எல்லா இடங்களிலும் இருக்கும் கடவுள்.

விநாயகர் சிலை
விநாயகர் சிலை
விநாயகர் சதுர்த்தி: வீட்டில் செய்ய 13 வகையான கொழுக்கட்டை ரெசிப்பீஸ் இதோ!

மொத்தம் 32 வகையான விநாயகர் உருவங்கள் உள்ளதாகக் கூறுவார்கள். அதில் 16 விநாயகர் உருவங்கள் தற்போது வழிபாட்டு நடைமுறையில் உள்ளன. அவற்றுள் சக்தி கணபதி, சித்தி கணபதி, மகா கணபதி, வலம்புரி, இடம்புரி என நாம் பலவற்றை பார்க்கிறோம். விநாயகர் சதுர்த்தியன்று, ஒரு விநாயகரை நாமே செய்து நாமே பெயரிட்டுக்கொள்ள முடியும். செல்வ கணபதி, கண்திருஷ்டி கணபதி என நம் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது போல, விநாயகருக்குப் பெயர் வைத்துக்கொள்ள முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மற்ற சிலைகள் எத்தனை செய்தாலும் விநாயகர் சிலை செய்து முடிக்கும்போது ஒருவித மன நிம்மதி கிடைக்கிறது. விநாயகர் சிலை ஒவ்வொன்றும் செய்து பார்க்கும்போது, புதிதாகச் செய்வது போன்ற ஆச்சர்யம் தொற்றிக்கொள்ளும். செய்தவருக்கு மட்டும் இன்றி பார்ப்பவர்களுக்கும் மனஅமைதியும் சந்தோஷமும் கிடைக்கும். ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் அங்கீகாரமும், கலைக்கான மரியாதையும் அந்த மன அமைதிதான். பார்வையாளர்களும், அவர்களின் பாராட்டுகளும் எங்களுக்கு இன்னும் அதிக உற்சாகம் தரும்.

விநாயகர் சிலை
விநாயகர் சிலை
விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?-15 நிமிடங்களில் பூஜிப்பது எப்படி?- ஒரு வழிகாட்டல்!

விநாயகர் சிலைகளில் பல வகைகள் பார்த்திருப்போம், வாங்கியிருப்போம். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவரின் விருப்பங்களைக் கேட்டுத்தான் அதற்கு ஏற்ற சிலைகளைச் செய்கிறோம். அப்போதுதான் அவர்களைத் திருப்தியடைய செய்ய முடியும். மரத்தில், கல்லில், சிமென்டில், மெட்டலில் எனப் பல மூலப் பொருள்களில் விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் கல்லிலும் மெட்டலிலும் செய்யப்படும் விநாயகர் சிலைகள்தான் கோயில்களில் இருக்கும். அலங்காரத்துக்காக வீடுகளில் வைக்கும் விநாயகரை நம் விருப்பத்துக்கு ஏற்றதுபோல செதுக்கிக்கொள்ளலாம், நம் விருப்பத்துக்குப் பெயரிட்டுக்கொள்ளலாம். விநாயகர், மக்களின் கடவுள்!"

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு