Published:Updated:

120 ரகங்கள், 2 லட்சம் மலர்ச்செடிகள்; தளர்வுகளுக்கு பின் மலர் சீசனுக்கு தயாராகும் ஊட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

``நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து பாதுகாப்பான முறையில் சுற்றுலாவை கண்டுகளிக்க வேண்டும்." - மாவட்ட ஆட்சியர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா காரணமாக இரண்டாவது ஆண்டாக முடங்கிக் கிடந்த சுற்றுலாத்துறைக்கு தற்போதைய தளர்வுகள் புத்துயிர் பாய்ச்சும் விதமாக அமைந்திருக்கின்றன. சுற்றுலாவுக்கு அரசு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது முதலே சுற்றுலாத் தலங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். சுற்றுலா வருவாயை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த சிறு குறு வணிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
நீலகிரி: 4 மாதங்களுக்குப் பிறகு ஊட்டிக்கு வந்த மலை ரயில்! - பாட்டுப் பாடி வரவேற்ற ஊழியர்கள்

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை சீசன், அதற்கடுத்து வரும் இரண்டாவது சீசனும் ரத்து செய்யப்பட்டு பயனிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில்,இந்த ஆண்டின் இரண்டாவது சீசனை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இரண்டாவது சீசனுக்காக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 12,000 மலர் தொட்டிகளில் சுமார் இரண்டு லட்சம் மலர்ச்செடிகளை மாடங்களில் காட்சிப்படுத்தும் பணி இன்று தொடங்கியது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
125 நாள்களுக்குப்‌ பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்; மகிழ்ச்சியில் பயணிகள், சிறு வியாபாரிகள்!

சீசன் கொண்டாட்டங்கள் குறித்து பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர், ``நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எந்தத் தடையும் இல்லை தாராளமாக வரலாம். அதே சமயம் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து பாதுகாப்பான முறையில் சுற்றுலாவை கண்டுகளிக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாக உள்ளது" என்றார். கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பூங்கா நிர்வாகம், ``பயணிகள் தடுப்பூசி செலுத்திய விவரங்கள் கேட்கப்படும்.கிருமிநாசினிகள் கொடுக்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்படும்" என தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு