Published:Updated:

`சாதி பார்த்து வேண்டாம்; நான் தமிழர் என்பதற்காக வாக்களித்தால் போதும்!’ - நெல்லையில் சீமான்

``சாதியைப் பார்த்து எனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம், நான் தமிழர் என்பதற்காக வாக்களித்தால் போதும்" என்று நெல்லை மாவட்டத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர் பேசினார்.

நாம் தமிழர் கட்சி மட்டுமே சாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்திவருகிறோம்.
சீமான், நாம் தமிழர் கட்சி

``சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொரு கட்சியினரும் குறிப்பிட்ட சில சாதியினரை வேட்பாளர்களாக நியமிப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி மட்டுமே சாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்திவருகிறோம். சாதியைப் பார்த்து எனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம், நான் தமிழர் என்பதற்காக வாக்களித்தால் போதும்.

சமத்துவத்துக்காகவும், சமூகநீதிக்காகவும் வள்ளலார், வைகுண்டர், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் எனப் பல தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால் தமிழர்களுக்கு எந்த அடையாளமும் இருந்துவிடக் கூடாது எனச் சிலர் செயல்படுகிறார்கள். எங்களை அடையாள அரசியல் பேசுவதாகச் சொல்பவர்கள், பெரியாரையும் கலைஞரையும் வைத்து அடையாள அரசியல் செய்கிறார்கள்.

சீமான்
சீமான்

நாம் தமிழர் கட்சியினர் தற்சோர்வு அடையக் கூடாது. நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நமது வாக்குவங்கி 2016-ல் 1.1 விழுக்காடும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் 4.5 விழுக்காடும் இருந்தது. நடந்து முடிந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி ஏழு விழுக்காடு பெற்றிருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் வந்த பாதை திராவிடப் பாதை. என் தலைவனைச் சந்தித்து வந்த பிறகு என் பாதை தமிழர் பாதையாகிவிட்டது. அவரைச் சந்திப்பதற்கு முன்பு இருந்த சீமான் வேறு, அவரைச் சந்தித்த பிறகு இருக்கும் சீமான் வேறு. பெரியாரைப் பேசியிருக்கிறேன். திராவிடத்தைப் பேசியிருக்கிறேன். அது நான் வழிநடந்த பாதை. இது நான் வழிநடத்தும் பாதை,.

வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

வேட்பாளர்கள் அனைவரும் கொள்கையின் தூதுவர்களாக மாறி சிற்றூர் முதல் அனைத்துப் பகுதிகளுக்கும் கொள்கைகளைக் கொண்டு செல்லும் வகையில் இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாகத் தோற்கடித்தவர்கள் நம்மைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள் அந்தக் காலம் விரைவில் வரும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு