Published:Updated:

அரியலூர்: `பிள்ளைகளுடன் ஒருவரை அனுப்புங்கள்!' - உயிரிழப்பைத் தடுக்கப் பெற்றோருக்கு போலீஸ் அறிவுரை

அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை

திவ்யபிரியா, மகாலெட்சுமி இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். மற்ற நான்கு பேரும் விரகாலூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக தற்போது இருக்கின்றனர்.

அரியலூர்: `பிள்ளைகளுடன் ஒருவரை அனுப்புங்கள்!' - உயிரிழப்பைத் தடுக்கப் பெற்றோருக்கு போலீஸ் அறிவுரை

திவ்யபிரியா, மகாலெட்சுமி இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். மற்ற நான்கு பேரும் விரகாலூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக தற்போது இருக்கின்றனர்.

Published:Updated:
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கள்ளூர் பாலம் வழியாக புள்ளம்பாடி பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் வெற்றியூர் காலனி தெருவைச் சேர்ந்த ராமசாமி மகள் மகாலெட்சுமி, திவ்யபிரியா, இனியா, லாவண்யா, பூஜா, சரண்யா ஆகியோர் வெற்றியூர் கிராமத்தின் தென்புறம் செல்லும் புள்ளம்பாடி வாய்க்காலில் இறங்கிக் குளித்திருக்கின்றனர்.

அரியலூர்
அரியலூர்
புள்ளம் பாடி வாய்க்கால்
புள்ளம் பாடி வாய்க்கால்

வாய்க்காலில் தண்ணீர் அதிகமாகச் செல்வதால், துணி துவைத்துவிட்டு குளித்துக்கொண்டிருந்த அந்த ஆறு சிறுமிகளும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

செய்வது அறியாமல் தவித்த மாணவிகள் சத்தம் போட, வயல் வெளியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள், வாய்க்காலில் குதித்து மாணவிகளைக் காப்பாற்றியிருக்கின்றனர்.

குளிக்கச் சென்ற போது விபரிதம்
குளிக்கச் சென்ற போது விபரிதம்

ஆனால் திவ்யபிரியா, மகாலெட்சுமி இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். மற்ற நான்கு பேரும் விரகாலூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக தற்போது இருக்கின்றனர்.

உயிரிழந்த பெண் பிள்ளைகள்
உயிரிழந்த பெண் பிள்ளைகள்

இறந்து போன மகாலட்சுமி, திவ்யபிரியா இருவரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இந்தச் சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கை விசாரித்து வரும் போலீஸாரிடம் பேசினோம். ``பெண் பிள்ளைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாக பெற்றோர்களைத் தான் சொல்வோம். ஆறு, கிளை ஆறுகள், வாய்க்கால்களில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதில் பெண் பிள்ளைகளை ஆற்றில் துணி துவைக்க அனுப்புவது முதல் தவறு.

கிராம மக்கள்
கிராம மக்கள்

பெண் பிள்ளைகளைத் துணி துவைக்க அனுப்பும்போது வீட்டிலிருந்து ஒரு நபரை உடன் துணைக்கு அனுப்பி இருந்தால், இது போன்ற விபரீம் நடந்திருக்காது. தண்ணீரில் அடித்துச் செல்லும்போது பிள்ளைகள் சத்தம் போட்டதால் விவசாய வேலைகள் செய்துகொண்டிருந்த விவசாயிகள் வாய்க்காலில் இறங்கிக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை

அவர்கள் இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும். ஆறு பிள்ளைகளுமே தண்ணீரில் அடித்துச் சென்றிருப்பார்கள். இதுவே கடைசியாக இருக்கட்டும். இனி ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ அனுப்பினால் துணைக்கு ஒருவரை கட்டாயம் அனுப்புங்கள்” என்றனர் காட்டமாக.