Published:Updated:

`எங்களைத் தாக்குகிறார்கள்’ -எஸ்.பிக்கு சென்ற புகார்; கரூர் நிவாரண பணியில் மோதும் அ.தி.மு.க, தி.மு.க

எஸ்.பியிடம் புகார் கொடுக்கும் செந்தில் பாலாஜி
எஸ்.பியிடம் புகார் கொடுக்கும் செந்தில் பாலாஜி ( நா.ராஜமுருகன் )

அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் கொரோனா ஊரடங்கை ஒட்டி, மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் போட்டாபோட்டி நிலவுகிறது.

கரூர் மாவட்ட தி.மு.க-வினர் மீது, அ.தி.மு.க-வினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக, கரூர் மாவட்ட எஸ்.பி-யிடம், தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி புகார் மனு அனுப்பியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசும் செந்தில் பாலாஜி
செய்தியாளர்களிடம் பேசும் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்
`செந்தில் பாலாஜியின் தொகுதி நிதியைப் பயன்படுத்தாதது ஏன்?' - அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்

அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் கொரோனா ஊரடங்கை ஒட்டி, மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் போட்டாபோட்டி நிலவுகிறது. செந்தில் பாலாஜி ஒரு லட்சத்து, நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கி வருகிறார். அதோடு, தினமும் பத்தாயிரம் பேர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

எஸ்.பியிடம் புகார் கொடுக்கும் செந்தில் பாலாஜி
எஸ்.பியிடம் புகார் கொடுக்கும் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

மற்றொரு பக்கம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறார். மக்களை யார் கவர்வது என்ற போட்டியில், இரண்டு தரப்புக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு கரூர் மாவட்ட எஸ்.பி பாண்டியராஜனை சந்தித்த செந்தில் பாலாஜி, அ.தி.மு.க-வினருக்கு எதிராக புகார் ஒன்றைக் கொடுத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நாங்கள் மக்களுக்கு வழங்கும் உதவிகளால், கரூர் மாவட்ட தி.மு.க-வுக்கு பெரிய பெயர் கிடைத்து வருகிறது. அதைத் தடுக்க, அமைச்சர் தரப்பு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. ஆரம்பத்தில், நாங்கள் மக்களுக்கு உணவு கொடுப்பதை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளை வைத்து தடுத்தார்கள். மருத்துவமனைகளுக்குக் கொரோனா தடுப்பு உபகரணங்களை வாங்க ஏதுவாக நான் ஒதுக்கிய எனது தொகுதி நிதி ஒரு கோடியே மூன்று லட்சத்தை ஒதுக்காமல் மாவட்ட ஆட்சியரை விட்டு கேன்சல் பண்ண வைத்தனர். கோர்ட் மூலமா உணவு வழங்குவதைத் தொடர்ந்தோம். தொகுதி நிதி வாங்காதது பற்றியும் கோர்ட்டுக்கும் போய் இருக்கிறோம்.

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கி வரும் தி.மு.க-வினரை, அ.தி.மு.க-வினர் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். கரூர் வெங்கமேடு, கொங்கு நகரில் வசிக்கும் கரூர் வடக்கு நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணனை, கடந்த ஏப்ரல் 4-ம் தேதி, கரூர் வடக்கு நகர அ.தி.மு.க நகரச் செயலாளர் பாண்டியன் மற்றும் அவரது ஆட்கள் சேர்ந்து தாக்கினார்கள். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, இப்போது கண்ணன் வீட்டில் உள்ளார். ஆனால், அவரைத் தாக்கியவர்கள் மீது, காவல்துறை இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

அதேபோல், அதே கரூர் வடக்கு நகர அ.தி.மு.க கழகச் செயலாளர் பாண்டியன், வாத்து என்கிற சந்துரு, கோபால், சரண்ராஜ், ஆனந்த், தினேஷ், புல்லட் மணி, சீனி, கண்ணன் உள்ளிட்ட 30 பேர் சென்று, தி.மு.க நிர்வாகிகளான கார்த்திகேயன், கௌதமன், மனோஜ் மற்றும் கருணாகரன் ஆகியோரை கடுமையாகத் தாக்கினர். தாக்குதலுக்குள்ளான தி.மு.க-வினர் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதேபோல், நேற்று காலை தி.மு.க நிர்வாகியான தான்தோன்றிமலை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தீபக், அவரது வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு, திரும்பி வந்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசும் செந்தில் பாலாஜி
செய்தியாளர்களிடம் பேசும் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

அவரை, அ.தி.மு.கவைச் சேர்ந்த திருக்காம்புலியூரைச் சேர்ந்த நிஷாந்த், தொழில்பேட்டை மதன், பெரிய ஆண்டாங்கோயில் ராமதுரை உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் உருட்டுக்கட்டைகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஆனால், தீபக்கை தாக்கியவர்கள் மீது புகார் கொடுத்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான், தி.மு.க-வினர்களைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கரூர் மாவட்ட எஸ்.பி பாண்டியராஜனிடம் புகார் கொடுத்துள்ளோம். அப்படியும் நடவடிக்கை எடுக்கலன்னா, கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க வைப்போம்" என்றார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசினோம். ``மக்களுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் செந்தில் பாலாஜி ஆட்கள் எல்லை மீறுகிறார்கள். அ.தி.மு.க-வினர்களை வம்பிழுப்பது அவர்கள்தான். அவர்கள்தான் அ.தி.மு.க-வினர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

ஆனால், செந்தில் பாலாஜி, எங்கள் மீது புகார் கொடுத்து, அரசியல் ஸ்டன்ட் அடிக்கிறார். அவரது இந்த அரசியல் எடுபடாது" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு