Published:Updated:

மு.க.ஸ்டாலின்: `மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர்!’ - அமைச்சர் செந்தில் பாலாஜி

``கோரிக்கைகளை எடுத்துக் கூறும் முன்னரே, அதை நிறைவேற்றக்கூடிய முதல்வராகவும், அனைத்து மக்களும் பாராட்டக்கூடிய முதல்வராகவும் தமிழக முதல்வர் திகழ்கிறார்” என்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவிலுள்ள மற்ற முதல்வர்களுக்கு முன்னுதாரணமாகவும், முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்துவருவதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்திருக்கிறார்.

கலந்துகொண்ட தி.மு.க-வினர்
கலந்துகொண்ட தி.மு.க-வினர்
கனவான அமைச்சர் பதவி; எம்.பி வேட்பாளராக்கிய `திருமதி முதன்மை’ - ராஜேஸ்குமார் தேர்வானது எப்படி?

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பட்டிருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் லைம்லைட்டுக்குள் வந்திருக்கின்றன. அந்த வகையில், கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், சத்தி திருமண அரங்கில், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்டப் பொறுப்பாளரும், தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் இந்தச் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேசும் செந்தில் பாலாஜி
கூட்டத்தில் பேசும் செந்தில் பாலாஜி

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ``தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் எட்டு ஊராட்சிகள், 56 வாக்குச்சாவடிகளிலுள்ள 38,138 வாக்காளர்கலின் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். கடந்த நான்கு மாதகால ஆட்சியில், எட்டு ஊராட்சிகளில் தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, வாக்குச் சேகரிக்க வேண்டும். திமுக தலைவர் அறிவிக்கவிருக்கும் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடக்கூடிய எதிர்க்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். அதற்காக, திமுக தொண்டர்கள் அயராமல் உழைக்க வேண்டும். நான்கு மாத காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை கரூர் மாவட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் சட்டமன்றத்தில் எடுத்துக் கூறிய கோரிக்கைகளை ஏற்று, ரூ.1,450 கோடி மதிப்பீட்டில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மற்றும் தடுப்பணைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்துக்கு வேளாண்மைக் கல்லூரி, வெள்ளியணை குளித்தலை, பஞ்சப்பட்டி, ஜெகதாபி, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி ஆற்றிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வழிவகை செய்யப்படும்.

கூட்டத்தில் பேசும் செந்தில் பாலாஜி
கூட்டத்தில் பேசும் செந்தில் பாலாஜி

தொடர்ந்து, இப்போது வறட்சியாக இருக்கும் பகுதிகளை, பசுமையான பகுதிகளாக மாற்றி மீண்டும் விவசாயத்தைச் செழிப்படையச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறோம். தமிழக முதல்வரிடம் கோரிக்கைகளை எடுத்துக் கூறும் முன்னரே, அதை நிறைவேற்றக்கூடிய முதல்வராகவும், அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டக்கூடிய முதல்வராகவும் தமிழக முதல்வர் திகழ்கிறார். அதோடு, இந்தியாவிலுள்ள மற்ற முதல்வர்களுக்கு முன்னுதாரணமாகவும், முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராகவும் திமுக தலைவர் திகழ்ந்துவருகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளையும் கைப்பற்றி, கரூர் மாவட்டம் கலைஞரின் கோட்டை என்பதை நிரூபித்திருக்கிறோம்.

நிலக்கரி விவகாரம்: `மேட்டூரிலும் ஆய்வு நடத்தப்படும்!’ - அமைச்சர் செந்தில் பாலாஜி

நமக்கு வாக்களித்தவர்கள் சந்தோஷப்படக்கூடிய வகையிலும், வாக்களித்தவர்கள் ஏன் வாக்களிக்காமல் விட்டோம் என வருத்தப்படக்கூடிய வகையிலும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் செயலாற்றிவருகின்றனர். மக்கள் `நமது அரசு’ எனப் பெருமைகொள்ளும் அளவுக்குப் பணியாற்றிவருகின்றனர். இன்னும் கரூர் மாவட்டத்துக்குப் பல சிறப்புமிக்க திட்டங்கள் தமிழக முதல்வரால் அறிவிக்கப்படவிருக்கின்றன. எனவே, அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு