Published:Updated:

``தமிழ்நாட்டைவிட குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளது" - அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

"தமிழ்நாட்டைவிட குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாகவே உள்ளது. ஆனால், அதை மறந்து, மறைத்து எதிர்க்கட்சிகள் பேசிவருகின்றன" என்று கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

``தமிழ்நாட்டைவிட குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளது" - அமைச்சர் செந்தில் பாலாஜி

"தமிழ்நாட்டைவிட குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாகவே உள்ளது. ஆனால், அதை மறந்து, மறைத்து எதிர்க்கட்சிகள் பேசிவருகின்றன" என்று கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

Published:Updated:
செந்தில் பாலாஜி

கரூரில், தி.மு.க மாவட்ட செயற்குழுக் கூட்டம், கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, "புதுக்கோட்டையில் மின் இணைப்பு வேண்டி நூதன பிரசாரம் செய்தது குறித்துக் கேட்கிறீர்கள். சம்பந்தப்பட்ட வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்கும் வழியில் மின் கம்பம் பொருத்துவதில் இரண்டு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் சுமுக உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டுவருகிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஆனால், குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின்தடை ஏற்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் விநியோகம் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளைப் பேசி, மக்களிடம் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் 6 முதல் 7 நாள்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது. ஆனால், அதைவிடக் குறைவாகவே குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரி கையிருப்பு குறித்து தமிழ்நாட்டைக் குறைகூறும் இயக்கங்கள், தாங்கள் ஆளக்கூடிய மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது, அங்கெல்லாம் மின்வெட்டு எவ்வளவு நேரம் உள்ளது, மின் விநியோகம் எவ்வளவு நேரம் கொடுக்கப்பட்டுவருகிறது என்பதையெல்லாம் மறந்து, மறைத்துப் பேசிவருகின்றனர். பொய்ப் பிரசாரம் மக்களிடத்தில் எடுபடாது. தமிழ்நாட்டில் தற்போது காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அனல்மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism