Published:Updated:

`கால்வாயிலிருந்து நான் காப்பாத்தின குழந்தைய என்கிட்ட காட்ட மாட்டிறாங்க!' - துணை நடிகை கீதா உருக்கம்

கீதா

``பத்து மாசம் சுமந்து பெற்ற குழந்தையை ஒரு துணியில கூட சுத்தாம அப்படியே தூக்கி எறிஞ்சிட்டு போயிருக்காங்க. அந்தக் குழந்தையை எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க."- கீதா

`கால்வாயிலிருந்து நான் காப்பாத்தின குழந்தைய என்கிட்ட காட்ட மாட்டிறாங்க!' - துணை நடிகை கீதா உருக்கம்

``பத்து மாசம் சுமந்து பெற்ற குழந்தையை ஒரு துணியில கூட சுத்தாம அப்படியே தூக்கி எறிஞ்சிட்டு போயிருக்காங்க. அந்தக் குழந்தையை எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க."- கீதா

Published:Updated:
கீதா
சுதந்திரம்... இந்தப் பெயரை நிச்சயம் மறந்திருக்க வாய்ப்பில்லை... 2018 ஆம் ஆண்டு கால்வாயில் கிடந்த குழந்தை தான் இந்த சுதந்திரம்! சுதந்திரத்தை மீட்டு அவனுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்து அந்தப் பச்சிளம் குழந்தையை காப்பாற்றியவர் கீதா.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆன நிலையில் கீதா என்றாவது ஒருநாள் தன்னைத் தேடி சுதந்திரம் நிச்சயம் வருவான் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறார். அவரை சந்தித்துப் பேசினோம்.

கீதா
கீதா

` 2018 சுதந்திர தினம் அன்னைக்கு காலையில என் பொண்ணு என்கிட்ட வந்து அம்மா கால்வாய்குள்ள குழந்தை அழுற சத்தம் கேட்குறதா சொல்றாங்கம்மா... என்னன்னு வந்து பாருங்கன்னு சொன்னா. அவ சொன்னப்ப கூட அது எப்படி கால்வாய்குள்ள குழந்தை இருக்கும்னு சொல்லிட்டேதான் போனேன். அங்க ஒரு கால்வாய்ல பிறந்த பச்சிளம் குழந்தையை தொப்புள் கொடியைக் கூட அறுக்காம போட்டுட்டு போயிருந்தாங்க.

பத்து மாசம் சுமந்து பெற்ற குழந்தையை ஒரு துணியில கூட சுத்தாம அப்படியே தூக்கி எறிஞ்சிட்டு போயிருக்காங்க. அந்தக் குழந்தையை எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க. எல்லார் மாதிரியும் என்னாலயும் வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியல. குழந்தையை வேகமா உள்ள இருந்து எடுத்தேன். எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னு தான் அதை வீடியோ எடுக்க சொன்னேன். அந்தக் குழந்தையை புழு, பூச்சி எல்லாம் கடிச்சிட்டு இருந்துச்சு. வெந்நீர் போட்டு நல்லா குளிப்பாட்டிட்டு ஒரு துணியை சுத்தினப்ப தான் போலீஸ்காரங்க வந்தாங்க. 

கீதா
கீதா

அவங்க கூடவே மருத்துவமனைக்குப் போனேன். அங்க குழந்தைக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க.குழந்தை நிறைய சாக்கடை தண்ணீரை குடிச்சிட்டதாகவும் சொன்னாங்க. அங்க குழந்தையை சேர்க்கும்போதுதான் குழந்தை பெயர் என்னன்னு கேட்டாங்க. அன்னைக்கு சுதந்திர தினம் என்பதால் இனி இந்தக் குழந்தை இந்த உலகத்துல சுதந்திரமா வாழலாம்னு சொல்லி `சுதந்திரம்'னு பெயர் வச்சேன். ஒரு வயசு குழந்தைக்கு தான் எல்லாரும் பிறந்தநாள் கொண்டாடுவாங்க. நான் ஒரு மாசக் குழந்தைக்கே கேக் எல்லாம் வாங்கிட்டு போய் பிறந்தநாள் கொண்டாடினேன். ஒரு மாசம் சுதந்திரம் ஆஸ்பத்திரியில இருந்தான். எப்போதெல்லாம் அவனைப் பார்க்கணும் போல இருக்கோ அன்னைக்கெல்லாம் அவனைப் பார்க்க போயிடுவேன். 

இதுக்கிடையில் எனக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தி விருதெல்லாம் கொடுத்தாங்க. அப்ப சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய பாஸ்கர் சார் நீங்களே குழந்தையை வளர்க்கலாம்.. அதற்கான அனுமதியைக் கொடுக்கிறேன்னு சொன்னார். அதுக்கப்புறம் `தொட்டில் குழந்தை திட்டம்' மூலமா சுதந்திரத்தை அங்க கூட்டிட்டு போயிட்டாங்க. அங்க போன பிறகு அசையா சொத்து இருக்கணும் அப்படி இப்படின்னு ஏதேதோ காரணங்களால என்னால குழந்தையை தத்தெடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அன்னைக்கு அந்தக் குழந்தையை நான் காப்பாற்றாம இருந்திருந்தா அந்தக் குழந்தையோட உயிர் போயிருக்கும்!

கீதா
கீதா

ஒரு மாசத்துக்குப் பிறகு அங்கிருந்து குழந்தையை ஆசிரமத்துக்கு மாத்திட்டாங்க. அங்கேயும் அடிக்கடி போய் அவனைப் பார்த்துட்டு அவனுக்கு டிரெஸ்லாம் ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுத்துட்டு வருவேன். நான் ஒவ்வொரு தடவை அங்க போகும்போதும் அவங்க பண்றதெல்லாம் என்னை அவாய்ட் பண்ற மாதிரியே இருந்துச்சு. ஒரு மாசம் கழிச்சு குழந்தையை ஒருத்தங்க தத்தெடுக்கப் போகிறதா சொன்னாங்க. அப்ப மனசு ரொம்ப கஷ்டமாகிடுச்சு. குழந்தைங்கிறது தெய்வம் கொடுக்கிற வரம்! அந்தக் குழந்தையை வளர்க்கிற கொடுப்பணை நமக்கில்லையேன்னு வருத்தமா இருந்துச்சு. சரி எங்க இருந்தாலும் குழந்தை நல்லா இருக்கட்டும்னு நினைச்சேன். அந்தக் குழந்தையை பிரிய மனசே வரல. அந்த நேரத்துல ரொம்ப வேதனையா இருந்துச்சு என்றவர் தொடர்ந்து பேச முடியாமல் அழுதார். சில நொடி மெளனத்திற்குப் பின் தொடர்ந்தார்.

அந்தக் குழந்தையை பெங்களூர்ல தத்தெடுத்துட்டுப் போயிட்டதா சொன்னாங்க. குழந்தை எப்படி இருக்குன்னு போன் பண்ணிக் கேட்பேன். ஆனாலும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டாங்க. சொத்து இருக்கிறவங்கதான் குழந்தையை வளர்க்கணுமா என்ன? சொத்து இல்லாதவங்களால குழந்தையை வளர்க்கவே முடியாதா? ஏன் அதை அரசாங்கம் யோசிக்க மாட்டேன்றாங்க. எங்களை மாதிரி உள்ளவங்க வளர்க்கக் கூடாதா?

நியூஸ் 7லிருந்து தங்கத்தாரிகை விருது கொடுத்தாங்க. நிறைய விருது வாங்கியிருக்கேன். சின்னத்திரையிலும் விருது வாங்கியிருக்கேன். அப்ப விஜயதாரணி மேடம் என்ன வேலை பார்க்குறீங்கன்னு கேட்டாங்க.. நான் எந்த வேலைக்கும் போகலைம்மா வீட்டுல தான் இருக்கேன்னு சொல்லவும் விஜயபாஸ்கர் சார்கிட்ட இந்த அம்மாவுக்கு ஒரு வேலை கொடுங்கன்னு சொன்னாங்க. அவர் சரி வேலை தரேன்னு சொன்னார். அவர் சொன்னதை கேட்டுட்டு பலரும் அரசாங்க உத்யோகம் எனக்கு கொடுத்துட்டதாக நினைச்சாங்க.

கீதா
கீதா

ஆனா, அது கான்ட்ராக்ட் வேலை தான்! எனக்கு பொது சேவை பண்ண தான் பிடிக்கும். பணத்துக்காக எந்த வேலையும் பார்க்க பிடிக்கலை. அந்த வேலை பண்ண பிடிக்காம விட்டுட்டேன். குழந்தையை குப்பை மாதிரி போட்டு போறாங்க. எத்தனையோ பேர் அப்படிப்பட்ட குழந்தையை காப்பாத்துறாங்க. அவங்க எல்லாருக்கும் எப்படி வேலை கொடுக்க முடியும்? பொதுசேவைன்னா அது சேவையாகவே இருக்கட்டும்னு வேலை வேண்டாம்னு முடிவு பண்ணி வெளியில வந்துட்டேன்.

எனக்கு ரொம்ப பிடிச்சவர்னா முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா தான்! அவரை நேரில் சந்திக்கணும். அவர் பாராட்டி அவர் கையால ஒரு விருது வாங்கணுங்கிற அளவுக்கு ஏதாவது சேவை பண்ணணும். அதுதான் என் ஆசை. இப்ப சுதந்திரத்துக்கு நாலு வயசாகியிருக்கும். என் கூட இருந்துருந்தா பாட்டி, பாட்டின்னு என் முந்தானையைப் பிடிச்சு சுத்திட்டு இருந்திருப்பான். அவனை ஒரு தடவையாச்சும் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. அந்த 7 மாசக் குழந்தையோட முகம் மட்டும்தான் எனக்கு ஞாபகத்துல இருக்கு. தத்து எடுத்துட்டு போனவங்களுக்கு நான் தான் அந்தக் குழந்தையை மீட்டதுன்னு நிச்சயம் தெரிஞ்சிருக்கும். அவங்களாவது இந்தம்மாகிட்ட ஒரு தடவை குழந்தையைக் காட்டலாம் அல்லது போன் நம்பர் வாங்கி போட்டோ, வீடியோகால் பண்ணியாவது காட்டலாம்னு நினைச்சிருக்கலாம். அவங்களும் விட்டுட்டாங்க.

கீதா
கீதா

அந்தக் குழந்தையை எடுக்கும் போதே பலர் என்னைத் திட்டினாங்க. பப்ளிசிட்டிக்காக பண்றேன்னுலாம் சொன்னாங்க. ஒரு நாள்ல ஒபாமா ஆகிட்டாங்கன்னு சொன்னாங்க. அதெல்லாம் நான் பெருசாவே எடுத்துக்கல. இப்ப நாம ஒரு விஷயம் பண்றோம்னா அதுல பாவம், புண்ணியம்னு இருக்கு. புண்ணியத்தை சேர்த்துக்கிட்டா நான் ரோட்டுல மயங்கி விழுந்தா நான் பண்ண புண்ணியம் என்னை காப்பாத்தும். உடல் உறுப்பு முழுக்க என் முடியில இருந்து என் சதை வரைக்கும் தானம் கொடுத்திருக்கேன். எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். என் பொண்ணு என் படத்தை வச்சு கும்பிட்டா போதும். நான் இருக்கும்போதும் நல்லது தான் செய்தேன்.. செத்த பிறகும் 4 பேர் ரூபத்துல நான் வாழ்வேன். என்னைக்காவது ஒரு நாள் என் சுதந்திரம் என்னைத் தேடி வருவான்னு காத்திருக்கேன்!' என்றார்.

கீதா சுதந்திரம் குறித்து பேசிய வீடியோ காண லிங்கை கிளிக் செய்யவும்!