Published:Updated:

``அதிமேதாவிகள்போல நடந்துகொள்ளாதீர்கள்..!” - அதிகாரிகளை விளாசிய அரியலூர் ஆட்சியர்

அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி

``நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், மக்களுக்கு எப்படி நம்மீது நம்பிக்கை வரும்... மக்களுக்காகச் சேவை செய்யுங்கள். அதிமேதாவிகள்போல நடந்துகொள்ளாதீர்கள்.”

``அதிமேதாவிகள்போல நடந்துகொள்ளாதீர்கள்..!” - அதிகாரிகளை விளாசிய அரியலூர் ஆட்சியர்

``நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், மக்களுக்கு எப்படி நம்மீது நம்பிக்கை வரும்... மக்களுக்காகச் சேவை செய்யுங்கள். அதிமேதாவிகள்போல நடந்துகொள்ளாதீர்கள்.”

Published:Updated:
அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி

``மனுக்களை எதற்காக மக்கள் நம்மிடம் கொடுக்க வருகிறார்கள்... எப்படியாவது பிரச்னை தீர்ந்துவிடும் என்கிற நம்பிக்கையில் நம்மை நாடுகிறார்கள். ஆனால், நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எப்படி நம்மீது நம்பிக்கை வரும்... அதிகாரிகள் என்றால் மேதாவிகளா... மக்களுக்காகச் சேவை செய்யுங்கள். அதிமேதாவிகள்போல நடந்துகொள்ளாதீர்கள்” என அதிகாரிகளை லெஃப்ட் ரைட் வாங்கினார் அரியலூர் கலெக்டர்.

அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.
அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.

அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியால் அறிவுறுத்தப்பட்டுவருகிறது. மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரியலூர்
அரியலூர்

இந்நிலையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியரால் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ரமண சரஸ்வதி ஆய்வுசெய்தார். ஆய்வின்போது பல மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கடுமையாக எச்சரித்தார்.

அரசு அதிகாரிகள்
அரசு அதிகாரிகள்

”நான் நடவடிக்கை எடுக்கச் சொல்லிக் கடந்த வாரமே மனுக்களை அனுப்பினேனே... ஏன் ஒரு வாரம் ஆகியும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பினர். ``மயிலே மயிலே என்றால் இறகு போட மாட்டீர்கள். அதிகாரிகள் என்றால் மேதாவிகளா... நீங்கள் அதிமேதாவிகள்போல் எல்லோரும் நடந்துகொள்கிறீர்கள். உங்களைப் பாராட்டி, சீராட்டித் தெரியாததைச் சொல்லிக் கொடுத்து வேலை செய்யச் சொன்னாலும் நீங்கள் செய்ய மாட்டீர்களா...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யார் சொன்னால் நடவடிக்கை எடுப்பீர்கள். மக்கள் கொடுக்கும் மனுக்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டால் ஏதாவது ஒரு கதையைச் சொல்லிருக்கலாம் என்ற எண்ணத்தில் இங்கு வருகிறீர்களா... மனுக்களை மக்கள் எதற்காக நம்மிடம் கொடுக்க வருகிறார்கள்?

அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி
அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி

எப்படியாவது பிரச்னை தீர்ந்துவிடும் என்கிற நம்பிக்கையில் நம்மை நாடுகிறார்கள். ஆனால் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், எப்படி நம் மீது நம்பிக்கை வரும்... மக்களுக்காகச் சேவை செய்யுங்கள். அதிமேதாவிகள்போல நடந்துகொள்ளாதீர்கள்” என அதிகாரிகளுக்கு டோஸ் விட்டதோடு அதிகாரிகளைப் பார்த்து ஆவேசமாகக் கேள்விகளை எழுப்பினார். ``இனிமேல் இது போன்ற தவறுகள் ஏற்படாத வகையில் பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் கண்டிப்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார் ஆட்சியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism