Election bannerElection banner
Published:Updated:

திருச்சி: சாக்குப்பைக்குள் கட்டி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - நெஞ்சைப் பதறவைத்த சம்பவம்!

சிசு
சிசு ( Representative Image )

திருச்சி விமான நிலையம் அருகே சாக்கில் கட்டி வீசப்பட்ட பெண் குழந்தையை, போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருச்சி விமான நிலையம் அருகே, காவேரி நகர் பகுதியிலுள்ள காலி மனை ஒன்றில் இன்று காலை 7 மணி அளவில், குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. அவ்வழியே சென்றவர்கள் உடனடியாகக் காவல்துறைக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர்.

குழந்தை
குழந்தை

சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீஸார், ஒரு சாக்குப்பையிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்பதைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து சாக்குப்பையைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ஏழு மாத குறைப்பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின் அங்கிருந்த அரசு மருத்துவமனைக்குக் குழந்தை அனுப்பிவைக்கப்பட்டது.

இது குறித்து விமான நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயிருடன் நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும் பெண் குழந்தையைச் சாக்குப்பையில் கட்டி காலி மனையில் வீசிச் சென்றிருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் குழந்தையை காலி மனையில் வீசியவர்கள் யார் என்றும் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு