Published:Updated:

அரசு விடுதி பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை புகார்? - ஒருவாரமாக தொடரும் விசாரணை!

பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் )

விடுதியில் தங்கியிருக்கும் நான்கு பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக​ கடந்த வாரம்​ புகார் எழுந்தது.

அரசு விடுதி பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை புகார்? - ஒருவாரமாக தொடரும் விசாரணை!

விடுதியில் தங்கியிருக்கும் நான்கு பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக​ கடந்த வாரம்​ புகார் எழுந்தது.

Published:Updated:
பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் )

​திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆதிதிராவிடர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதியில் தங்கியிருக்கும் நான்கு பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக​ கடந்த வாரம்​ புகார் எழுந்தது. இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அதிகாரிகள் மற்றும் ஆதி திராவிடர் நல ஆணைய அதிகாரிகள் மாணவிக​ளுக்குப் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டிருக்கிறதா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை
விகடன்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் எழுந்து ஒரு வாரமான நிலையில், இதுவரை வழக்கு பதிவுசெய்யப்படவில்லை. எனவே, ``இது குறித்து மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரித்து பள்ளி மாணவிகளுக்குப் பாலியல்​ரீதியான ​தொல்லைக் கொடுத்தவர்களை உடனடியாகக் கைதுசெய்து விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்" என ​கல்வியாளர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.விசாகன்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.விசாகன்

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகனிடம் விசாரித்தோம். ``குழந்தைகள்மீதான பாலியல் புகார் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் உடனடியாக கமிட்டி அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தைகள் என்பதால் கவனமாக கையாள வேண்டியிருக்கிறது. குழந்தைகள் நல பாதுகாப்பு துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அவர்களின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பாஸ்கரன்
பாஸ்கரன்

இது குறித்து திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் கேட்டோம். ``விடுதி மாணவிகள் பாலியல்ரீதியான பாதிப்புக்கு உள்ளானதாக புகார் அளிக்கப்படவில்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட பகுதி போலீஸார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். சிறுமிகள் தொடர்புடைய விவகாரம் என்பதால் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையினரின் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.