Published:Updated:

`முதல்வரின் முகவரி துறை' எப்படிச் செயல்படும்? - சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் விளக்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ்
ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் ( பா.காளிமுத்து )

`உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' உள்ளிட்ட முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய குறைதீர்ப்புத் துறைகளை ஒருங்கிணைத்து `முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையை உருவாக்கி அதன் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ்-ஐ நியமித்திருக்கிறது தமிழக அரசு.

`உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' உள்ளிட்ட முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய குறைதீர்ப்புத் துறைகளை ஒருங்கிணைத்து `முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையை உருவாக்கியிருக்கிறது தமிழக அரசு.

`முதலமைச்சரின் தனிப்பிரிவு’, `முதலமைச்சரின் உதவி மையம்’, `ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு’, `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ ஆகிய துறைகள், `முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையாகப் பரிணமித்திருக்கிறது. இதற்கான சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின்போது, `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்தார். ``ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தீர்க்கப்படாத பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதுகுறித்து தன்னிடம் மனு அளித்தால், நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 100 நாள்களில் அவற்றைத் தீர்த்து வைப்பேன்" என்று அப்போது அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறையை உருவாக்கி அதன் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ்ஸை நியமித்தார். ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டனர். `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

ஷில்பா பிரபாகர் சதீஷ்
ஷில்பா பிரபாகர் சதீஷ்
பா.காளிமுத்து

இதையடுத்து, `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற துறை இனி எந்த வகையில் செயல்படும் என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான், `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' உள்ளிட்ட முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய குறைதீர்ப்புத் துறைகளை ஒருங்கிணைத்து `முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையை உருவாக்கி அதன் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ்-ஐ நியமித்திருக்கிறது தமிழக அரசு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து ஷில்பா பிரபாகர் சதீஷிடம் பேசினோம், `` `முதலமைச்சரின் தனிப்பிரிவு' (Cm Cell) என்பதுதான் இப்போது `முதல்வரின் முகவரி' என்று புதிய துறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இதில் பெரிய குழப்பம் வேண்டாம். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுப்பதுதான் இந்தத் துறையின் பிரதான பணியாக இருக்கும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறைக்கு வந்த சுமார் 5 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது.

`உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்பதை ஸ்பெஷல் புராஜெக்டாகச் செய்தோம். ஆனால், இது அப்படி கிடையாது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்கள், முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்துக்குச் செல்கிறபோது பெறப்படுகிற மனுக்கள், ஆன்லைன் மற்றும் இ-மெயில் மூலமாக வருகிற மனுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அதை நான் மேற்பார்வை செய்யவிருக்கிறேன்" என்றார்.

`முடிக்கப்பட்ட 30,000 மனுக்கள்; முதலமைச்சர் கேட்ட அப்டேட்ஸ்!' - ஷில்பா பிரபாகர் சதீஷ் IAS Exclusive

இதற்கு முன்பு பணியாற்றிய இடங்களில் எல்லாம் நேர்மையான செய்வேகம் மிக்க அதிகாரி என்று பெயரெடுத்தவர் ஷில்பா பிரபாகர் சதீஷ். அதனாலேயே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலராக இவர் நியமிக்கப்படும்போது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இப்போது முதல்வரின் முகவரி என்ற புதிய துறைக்குச் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு