Published:Updated:

சோளிங்கர்: கால்வாய்க்குள் விழுந்த குழந்தை... காப்பாற்றிய தந்தை! -பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சி.சி.டி.வி காட்சிகள்

தன் கண்ணெதிரே கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்த குழந்தையை பாய்ந்துசென்று காப்பாற்றிய தந்தை தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.

சோளிங்கர்: கால்வாய்க்குள் விழுந்த குழந்தை... காப்பாற்றிய தந்தை! -பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

தன் கண்ணெதிரே கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்த குழந்தையை பாய்ந்துசென்று காப்பாற்றிய தந்தை தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
சி.சி.டி.வி காட்சிகள்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சியின் 6-வது வார்டுக்குட்பட்ட ஒத்தவாடை கிழக்குத் தெரு பகுதியில், கால்வாய் அடைப்பை சரிசெய்வதற்காக நகராட்சிப் பணியாளர்கள் கடந்த வாரம் பள்ளங்களைத் தோண்டினர். ஆனால், 10 நாள்களாகியும் கால்வாய் தூர்வாரப்படவில்லை; பள்ளங்களையும் மூடவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். வீடுகளின் வாசலிலேயே ஐந்தாறு அடிக்கு கால்வாய் பள்ளங்கள் இருப்பதால், குழந்தைகளை வெளியில் விடுவதற்கே பெற்றோர் அச்சப்படுகிறார்கள்.

பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்
பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவர் தன் 4 வயது மகள் மித்ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஸ்கூட்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டின் முன் ஸ்கூட்டரை நிறுத்தி, முன்பக்கம் இருந்த குழந்தையை இறக்கி விட்டுவிட்டு, மருந்துகளை எடுத்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தை நிலைத் தடுமாறி கழிவுநீர் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பதறிப்போன விவேக் கால்வாய்க்குள் குதித்து மகளை மீட்டு மேலே தூக்கினார். சிறு காயம் ஏற்பட்டதாலும், கால்வாய்க்குள் சகதிகள் அதிகம் இருந்ததாலும் சிறுமி சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ``நகராட்சி பணியாளர்களின் அலட்சியம் காரணமாகவே, இந்த விபத்து ஏற்பட்டது. குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஒருவேளை ஏதேனும் விபரீதம் ஏற்பட்டிருந்தால் நகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்குமா?’’ என்று ஆவேசமடைந்தனர்.

பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருவதால், நகராட்சிப் பணியாளர்கள் விரைந்து வந்து, சம்பவ இடத்திலிருந்த பள்ளத்தை பலகை கற்களைக் கொண்டு மூடினர். ‘‘அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் இந்த வேலைகளை செய்ய தவறியது ஏன்? பணியில் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும், மக்கள் உயிரோடு விளையாடும் நகராட்சிப் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism