Published:Updated:

`முகக்கவசம் போடாதது ஒரு குத்தமா?' - சர்ச்சையை ஏற்படுத்திய சீர்காழி திருமணம்

திருமணம்
திருமணம்

எங்கள் மகள் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால், கொரோனாவால் யாருக்கும் தெரியாமல் திருட்டுக் கல்யாணம் நடத்துவதுபோல் நடத்தியிருக்கிறோம்.

சீர்காழி அருகே இன்று நடைபெற்ற திருமணத்தில் கொரோனா பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படவில்லை, சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கவில்லை எனக் கொதிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

‘சீனாவுக்கு மட்டுமே ட்ரம்ப் தடை விதித்தார், ஆனால்...?’ - நியூயார்க் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன பின்னணி

நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தைச் சேர்ந்த சீமான் - வசந்தா தம்பதியின் மகன் மணிவேலுவுக்கும் தரங்கம்பாடி அருகே நல்லாடை கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் - சுமதி தம்பதியின் புதல்வி சந்தியாவுக்கும் இன்று அதிகாலை சீர்காழி தாலுகா வேட்டங்குடி ஸ்ரீ புற்றடி மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதற்காக இரு வீட்டார் சார்பிலும் தலா 10 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்ற உத்தரவின்பேரில், ஊராட்சி மன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் ஆகிய மூவரிடமும் அனுமதி கடிதம் பெற்றுத் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும், திருமணம் செய்யும் இடத்தில் கைகளை சோப்புப் போட்டு கழுவ தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால், இவை அனைத்தையும் பின்பற்றாமல் இருவீட்டார் சொந்தங்கள் சுமார் 40 பேர் கூடி திருமணம் நடந்தேறியது.

கொரோனா
கொரோனா

இதுகுறித்து பெண்ணின் தந்தை காசிநாதனிடம் பேசியபோது,

"எங்கள் மகள் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால், கொரோனாவால் யாருக்கும் தெரியாமல் திருட்டுக் கல்யாணம் நடத்துவதுபோல் நடத்தியிருக்கிறோம். நான் வெளிநாடு சென்று கஷ்டப்பட்டு சம்பாதித்தது எல்லாம் ஊரே வாழ்த்தும்படி மகள் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான். அரசின் கெடுபிடியால், மனக் குழப்பத்தால் முகக் கவசம் 50 வாங்கி வைத்தும் அதனை எடுத்து வர மறந்துவிட்டோம். இது ஒரு குத்தமா ? எப்படியோ மனம் சந்தோஷப்படாமல் கல்யாணம் முடிந்துவிட்டது" என்றார் வருத்தமாக.

அடுத்த கட்டுரைக்கு