Published:Updated:

சிவகங்கை: `மின் கம்பிகள் எப்போ விழுமோன்னு பயமா இருக்கு!' - கலங்கும் கிராம மக்கள் #MyVikatan

தெற்கு விசவனூரை சேர்ந்த நம் வாசகர் சுபி தாஸ், மை விகடன் வாயிலாக பகிர்ந்த பழைய மின்கம்பங்கள் தொடர்பான பிரச்னைக்கு விகடன் நிருபரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரத்தில் உள்ளது தெற்கு விசவனூர். இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ஊரணி வழியே உயர் மின்அழுத்த, மின்சாரக் கம்பி செல்கிறது. பழைய மின்கம்பங்களோடு தொடர்பில் இருக்கும் இந்த மின்கம்பிகள் குளத்திற்குள் விழுந்தால் உயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்து அவ்வூரை சேர்ந்த நம் வாசகர் சுபி தாஸ் #MyVikatan வாயிலாக புகைப்படங்களையும் தகவலையும் அனுப்பி வைத்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக கிராமத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் விகடன் நிருபர் விசாரித்தார்.

மின்கம்பி
மின்கம்பி

இது குறித்து தெற்கு விசவனூரை சேர்ந்த சுபி தாஸ் மற்றும் மஹாதீர் முகமது,

"எங்கள் கிராமத்தில் உள்ள குளத்தின் வழியாக மின் கம்பிகள் செல்கின்றன. மிகவும் ஆபத்தான முறையில் அமைந்திருக்கும், மின் கம்பிகள் எப்போது விழுமோ என்ற அச்சம் எங்கள் கிராம மக்களுக்கு உள்ளது. அப்பகுதியில் சிறுவர்கள், முதியவர்கள் எனப் பொதுமக்கள் அடிக்கடி கடந்துசெல்வார்கள். இப்படி மக்கள் செல்லும் நேரத்தில் மின்கம்பிகள் அறுந்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பிரச்னைகள் நடைபெறும் முன்பே மின்வாரி ஊழியர்கள் சுதாரித்து குறிப்பிட்ட மின் கம்பியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பாக 1 வருடத்திற்கு முன்பாகவே புகார் செய்துள்ளோம். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கைகளும் இல்லை. எனவே, அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டனர்.

ஆபத்தான் நிலையில் மின் கம்பிகள்
ஆபத்தான் நிலையில் மின் கம்பிகள்

மேலும், இது குறித்து தெற்கு விசவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா கூறுகையில், "கடந்த 5 மாதங்களுக்கு முன்பே மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளித்தேன். ஆனால், செய்து தருகிறோம் என்று தெரிவித்ததோடு சரி. தற்போது வரை மின்கம்பிகள் செல்லும் போஸ்ட்டுகளை மாற்றித் தரவில்லை. கிராம பொதுமக்களும் இதற்கு முன் புகார் அளித்துள்ளனர். நான் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி ஏற்ற பின்னர் அளித்த முதல் புகார் இதுதான். ஆனால் 5 மாதங்களுக்கு மேல் சரி செய்யப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது” என்றார்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து, மின்வாரிய உதவிப் பொறியாளர் நம்மிடம். "போஸ்ட் கம்பங்களை மாற்ற அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால், கம்பங்கள் இன்னும் வரவில்லை. அது வந்ததும் விரைவாக மாற்றி விடுவோம். கொரோனா காலகட்டம் என்பதால் காலதாமதம் ஆகிறது. விரைவாக போஸ்ட் கம்பங்களை மாற்றிக் கொடுக்க இருக்கிறோம்" என்றார்.

மின்கம்பம் குளத்தில்
மின்கம்பம் குளத்தில்

இதுகுறித்து சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜிடம் பேசினோம். "சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களிடம் பேசி , மின்கம்பங்களை மாற்றியமைக்க கண்டிப்பாக ஏற்பாடுகளை செய்கிறேன்" என்று உறுதியளித்தார்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு