Published:Updated:

`குளத்தை அரசு தூர்வாரியது...  கால்வாய நாங்க தூர்வாரிட்டோம்!' -அசத்தும் சிவகங்கை கிராம இளைஞர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜே.சி.பி மூலம் வரத்துக்கால்வாய்
ஜே.சி.பி மூலம் வரத்துக்கால்வாய்

குளம் இருந்தும் அதற்கு நீர்ப் பாதை இல்லாமல் இருந்ததை தற்போது நாங்கள் கொண்டுவந்துவிட்டோம். இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசு குளத்தைத் தூர்வாரியது, நாங்கள் வரத்துக் கால்வாயை தூர்வாரிவிட்டோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவகங்கை மாவட்டத்தில், பெரியகோட்டையை அடுத்த தெக்கூர் கிராமம் ஒரு முன்மாதிரியான கிராமமாக விளங்குகிறது. வ.உ.சி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் தொடர்ந்து சில வருடங்களாக ஆகச்சிறந்த சமூகப் பணிகளை இக் கிராமம் செய்துவருகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் 98 % ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கும் விதமாகக் களப்பணி ஆற்றி, சமூக ஆர்வலர்களின் பாராட்டுகளைப் பெற்றது.

கால்வாய்
கால்வாய்

மரக்கன்றுகள் நடுவது, குடிநீர் வசதி அளிப்பது, மகளிர் அமைப்புகளுக்கு இலவச தொழில் பயிற்சி கொடுப்பது, இலவச மருத்துவ முகாம், பிளாஸ்டிக் ஒழிப்பு, கஜா நிவாரணப் பணி என பல சமுதாயப் பணிகளைச் செய்துவருகிறது. இதனால் மானாமதுரை ஒன்றியத்தில் சிறந்த நற்பணி மன்ற விருதைப் பெற்றது. இப்படி பல்வேறு செயல்களால் கிராமத்தின் அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு அடைந்துள்ளது.

கொரோனா தொற்று ஆரம்பித்த சமயம் முதல் தற்போது வரை நோய் தடுப்புப் பணி, விழிப்புணர்வுப் பணி என அனிச்சையாக அசத்தியது. இந்நிலையில், வ.உ.சி இளைஞர் மன்றம் பல வருடங்களாக சுத்தம் செய்யமுடியாமல் கிடந்த குளத்தின் வரத்துக் கால்வாயை ஜே.சி.பி மூலம் சுத்தம் செய்து கிராமத்தின் குளத்திற்கு உயிர்கொடுத்துள்ளது.

வரத்துக்கால்வாய்
வரத்துக்கால்வாய்

இதுகுறித்து வ.உ.சி மன்ற இளைஞர்கள்," எங்கள் கிராமத்தில் பிரதானமாக 2 குளங்கள் நிலத்தடி நீரை மேம்படுத்திவருகிறது. இதில் முக்கியமாக, கைலாசநாதர் சிவன் கோயில் குளம் பயனற்றுக் கிடந்தது. குளம் இருந்தும் தண்ணீர் வந்து சேரவில்லை. இந்நிலையில், அதற்கு நீரைக் கொண்டுவந்து சேர்க்கும் விதமாக சுமார் அரை கிலோ மீட்டர் இருந்த வரத்துக்கால்வாயை மேம்படுத்தி, சாதித்துக் காட்டியுள்ளோம். சிவன் கோயில்குளம் ஒரு காலத்தில் குடிநீர் குளமாக விளங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுற்றுச்சூழல் மாற்றத்தால் நீர்ப்பிடிப்புக் குளமாக மட்டும் மாறியது. இந்நிலையில், இந்தக் குளத்திற்கு வரும் வரத்துக்கால்வாய் சிமென்ட் மூலம் கட்டப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதென மண்கள் கொட்டப்பட்டு கால்வாய் அடைக்கப்பட்டது. சிமென்ட் கால்வாய் பொதுமக்களால் சுத்தம் செய்யமுடியாத அளவிற்குக் கடினமாக மாறியதால், அந்த நீர்வழிப்பாதை முழுமையாக முடங்கிவிட்டது. இந்நிலையில், குளம் அரசு சார்பாக தூர்வாரப்பட்டது. ஆனால், குளத்திற்கு வரும் கால்வாய் அடைபட்டதால், அதை ஜே.சி.பி மூலம் சுத்தம் செய்து நீர்வரத்துக்கு மண்கால்வாயாக மாற்றியுள்ளோம்.

வ.உ.சி இளைஞர்கள்
வ.உ.சி இளைஞர்கள்

இதனால் தொடர்ந்து நீர்வழிப்பாதையைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளோம். குளம் இருந்தும் அதற்கு நீர்ப்பாதை இல்லாமல் இருந்ததை தற்போது நாங்கள் கொண்டு வந்துவிட்டோம். இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசு, குளத்தைத் தூர்வாரியது... நாங்கள் வரத்துக்கால்வாயைத் தூர்வாரிவிட்டோம். குளத்திற்கு மழைநீரைச் சேமிக்கும் பணி முடிந்துவிட்டது. ஆனால், எங்கள் பணியை ஊக்கப்படுத்தும் விதமாக கண்மாயிலிருந்து வரும் நீண்ட தூர கால்வாயை அரசு சரி செய்து கொடுக்க வேண்டும். அது எங்களை மேலும் ஊக்கப்படுத்தி பணி செய்யத் தூண்டும்” என கோரிக்கை விடுத்தனர்

குளத்திற்கு வரும் நீர்வழிப்பாதையைச் சரிசெய்து குளத்திற்கு உயிர்கொடுத்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு