Published:Updated:

`முதல்வர் மாவட்டத்தைப்போல் இழப்பீடு!' - நெடுஞ்சாலைத் துறையை அதிரவைத்த சிவகங்கை விவசாயிகள்

முதலமைச்சரின் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதுபோல் எங்களுக்கும் நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் நிலத்தை வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்

விவசாயிகள்
விவசாயிகள்

நெடுஞ்சாலை அமைப்பதற்கு எடுத்துக்கொண்ட நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட விவசாயிகள், மதுரையிலுள்ள நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநரின் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள்
பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் காட்டாம்பூர், பிராமணம்பட்டி, வாணியங்காடு திருக்கோஷ்டியூர், சுன்னாம்பிருப்பு ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு உட்பட்ட 60 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று மதுரைக்குக் கிளம்பி வந்தனர்.

மதுரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் நம்மிடம் ``எங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய விவசாய நிலங்களை நெடுஞ்சாலை அமைப்பதற்கு எடுத்தனர்

விவசாய மக்கள்
விவசாய மக்கள்

ஆனால், அதற்கு சரியான இழப்பீட்டை வழங்கவில்லை. நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனுக்கள் அனுப்பியும் எந்தவித பதிலும் தரவில்லை எங்கள் நிலங்கள் வெளி மார்க்கெட்டில் ரூ.25,000 முதல் ரூ.3,00,000 வரை விற்பனையாகும் நிலையில், அதிகாரிகள் 1000, 2000 என விலை நிர்ணயம் செய்து அதிலும் சிலருக்கு மட்டும் பணம் வழங்கியுள்ளனர்.

ஆனால், சேலம் மாவட்டத்தில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுத்தபோது அதிக அளவில் இழப்பீடு வழங்கியுள்ளனர். அதிகாரிகள் இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள். ஆள் பார்த்து இழப்பீடு வழங்குகிறார்கள்.

Vikatan

முதலமைச்சரின் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதுபோல் எங்களுக்கும் நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் நிலத்தை வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றனர். இவர்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.