Published:Updated:

சிவகங்கை: `இப்ப சொந்தமா தொழில் பண்றேன்; ஆனா அந்த வலி..!’ - மாற்றுத்திறனாளியின் கோரிக்கை

ராஜாராம்
ராஜாராம்

`எனக்கு அப்பா, அம்மா ரெண்டு பேரும் இறந்துட்டாங்க. அவங்க தவிறிப்போனதுதான் எனக்கு கை ஒடஞ்சது மாதிரி இருந்துச்சு’ மாற்றுத்திறனாளி இளைஞர் ராஜாராம்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம். ஒன்றரை வயதில் தனது இடது காலில் ஏற்பட்ட போலியோ அட்டாக்கால் 37 வயதிலும் தொடர்ந்து இவரை பாதிப்பு பின் தொடர்ந்து வருகிறது. கொரோனா சமயத்தில் வேலை இழந்த இவர் தற்போதும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ஹோட்டலில் வேலை செய்த இவர் தற்போது சொந்தமாகத் தொழில் செய்கிறார். இந்நிலையில் தனக்கு நீண்ட நாள் கோரிக்கையான மாற்றுத்திறனாளி மோட்டார் வாகனம் அரசு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

ராஜாராம்
ராஜாராம்

``எனக்கு 65 சதவீதம் உள்ளதென மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்திருக்காங்க. இடது கால் மட்டும் சரியா வேலை செய்யாது தாங்கி, தாங்கிதான் நடப்பேன். 10-வது படிச்சுருக்கேன். ஆனா, இங்கிலிஸ் பாடத்தில் பெயில் ஆயிட்டேன். அதனால அப்படியே திருப்பூர் போய்ட்டேன், ஹோட்டல் வேலை பார்க்க. பில்லிங் செக்சன்தான் இருப்பேன். மாஸ்டர் வேலைக்கு வரலேனா பஜ்ஜி, போண்டா, சமோசானு தின்பண்டங்களும் செய்வேன். எனக்கு வசதியா அடுப்ப கீழ வச்சு குடுத்துருவாங்க. அதனால உட்கார்ந்துகிட்டே எல்லா வேலையும் பார்த்திருவேன். 5 வருசம் இருக்கும் அங்கதான் பொழுது போச்சு. அம்மாக்கு முடியலேனு மறுபடியும் ஒக்கூருக்கே வந்துட்டேன்.

அதுக்கப்பறம் சிவேங்க.., திருப்பத்தூர்லையே ஓட்டல்ல வேலைக்கு சேர்ந்துட்டேன். கொரோனாக்கு முன்னாடி வரை அங்கதான் வேலை பார்த்தேன். பஸ் ஓடாததால வேலைக்குப் போக முடியல இப்ப சொந்த ஊர்லையே தெரு ஓரம் காய்கறி கடை போட்ருக்கேன். ஓட்டல் வேலை பார்க்கும்போது 200 ரூவாதான் கிடைக்கும். இப்ப என்னால சொந்த 350 ரூவாய்க்கு மேல சம்மாதிக்க முடியுது. சொந்த கால்ல நிக்கிறதும் சந்தோசமாதான் இருக்கு.

ராஜாராம்
ராஜாராம்

எனக்கு அப்பா, அம்மா ரெண்டு பேரும் இறந்துட்டாங்க. அவங் தவறிப்போனதுதான் எனக்கு கை ஒடஞ்சது மாதிரி இருந்துச்சு. தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டோம். என் அக்கா வாய் பேசமாட்டாங்க. கல்யாணம் பண்ணிக் கொடுத்த எடுத்துல ஒதுக்கிட்டதுனால அவங்களையும் நான்தான் பார்த்துக்கிறேன். எனக்கு கல்யாணம் ஆயிருச்சு 4 வயசுல பையனும் இருக்கான்.

ஏதோ பொழிப்பு ஓடுது. எனக்கு இடது கால் சாச்சு நடக்கும்போது வலி ஏற்படுது. அதனால எனக்கு ஒரு மோட்டார் பைக் இருந்தா ஈசியா இருக்கும் கலெக்டர் ஆபீஸ்ல தொடர்ந்து மனு கொடுக்கிறேன். உதவிதான் கிடைக்கவில்லை. எனக்கு ஒரு வண்டி மட்டும் கவர்மென்ட் ஏற்பாடு செய்தா என் பாரமே குறைஞ்சுரும்" என்றார் தழுதழுத்த குரலில்.

ராஜாராம்
ராஜாராம்

இது குறித்து சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம், "தொடர்ந்து இன்டர்வியூ மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பைக் கொடுத்து வருகிறோம். இவருக்கு ஏன் உதவிகள் கிடைக்கவில்லை எனத் தெரியவில்லை. நேரில் என்னை பார்க்க சொல்லுங்கள். அவருக்கு பைக் கொடுக்க முயற்சிகள் எடுக்கிறேன். மேலும் அவருக்கு சுயதொழில் செய்ய லோன் மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கிறேன். அவருக்கு என்ன உதவி செய்ய முடியுமோ தகுதியின் அடிப்படையில் கண்டிப்பாகச் செய்கிறேன்" என உறுதி அளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு