Published:Updated:

ரகசியத் தகவல்; சுற்றிவளைத்த சிவகங்கை காவல்துறை! -முந்திரிக் காட்டில் சிக்கிய 300 லிட்டர் கள்ளச்சாராயம்

கள்ளச்சாரயம்
கள்ளச்சாரயம்

கீழமாயாளி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமு கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போடப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்து அவரைக் கைது செய்து ஊறலைக் கீழே கொட்டி அழித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை 11 நபர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் குணமடைந்த நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சுமார் 300 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. சாராயம் காய்ச்சிய நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சி நபர்
கள்ளச்சாராயம் காய்ச்சி நபர்

மானாமதுரை அடுத்த கீழமாயாளி கிராமத்தில் உள்ள முந்திரித் தோப்பில் சாராயம் காய்ச்சப்படுவதாக மானாமதுரை டி.எஸ்.பி., கார்த்திகேயனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர் சேது, சார்பு ஆய்வாளர் மாரிகண்ணன், நாகராஜ், எஸ்.பி.தனிப்பிரிவு போலீஸார் ராஜா, போலீஸார் சந்திரன் ஆகியோர் அடங்கிய போலீஸ் டீம் முந்திரிக்காட்டைச் சுற்றிவளைத்தது.

அப்போது அங்கு கீழமாயாளி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமு கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போடப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்து ஊறலைக் கீழே கொட்டி அழித்தனர். இதில் சேர்ந்து வேலை செய்த மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். மானாமதுரைப் பகுதியில் மேலும் சில இடங்களில் கள்ளச்சாரயம் எதுவும் காய்ச்சப்படுகிறதா எனக் காவல்துறையினர் விசாரணை நடத்திவருவதாக டி.எஸ்.பி., கார்த்திகேயன் தெரிவித்தார

முந்திரிக் காட்டில்
முந்திரிக் காட்டில்

டாஸ்மார்க் மூடப்பட்டதால், புது விதமான போதைக்கு முயற்சி செய்து போதை ஆசாமிகள் மரணிப்பது தொடர்ந்துவரும் சூழலில், சிவகங்கை மாவட்டத்தில் தலைதூக்கும் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு