Published:Updated:

`ஆக்கிரமிப்பு; நீதிமன்ற உத்தரவு!’- 480 தென்னை மரங்களை வெட்டி மீட்கப்பட்ட கண்மாய்

தென்னை மரங்கள்
தென்னை மரங்கள் ( சாய்தர்மராஜ் )

நீர்ப்பிடிப்பு கண்மாயில் 480 தென்னை மரங்களை வளர்த்து ஆக்கிரமிப்பு செய்த இடத்தை நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா வாரியேந்தல் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான வாரியேந்தல் கண்மாய் உள்ளது.

தென்னை மரங்கள்
தென்னை மரங்கள்
சாய்தர்மராஜ்

இந்தக் கண்மாய் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு இருந்ததால் சிவகங்கை மாவட்ட முன்னாள் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை.

தென்னை
தென்னை

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதால், 5 ஏக்கருக்கும் குறைவான இடத்தில் இருந்த 480 தென்னை மரங்களை வெட்டி ஆக்கிரமிப்பை அகற்றினர். இந்தப் பணிகளைப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ரமேஷ் மற்றும் சிங்காரவேலுவும் பார்வையிட்டனர்.

அப்போது தாசில்தார் மூர்த்தி உடன் இருந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ``எங்கள் ஊர் கண்மாய் சுமார் 120 ஏக்கர் அளவு கொண்டது. இதனால் 150-க்கும் மேற்பட்ட பாசனப் பகுதிகள் விவசாயம் செய்யப்படுகிறது.

தென்னை மரங்கள்
தென்னை மரங்கள்
சாய்தர்மராஜ்

இந்நிலையில் ஊரில் உள்ள ஒருசில குடும்பத்தினர் தென்னை மரங்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்துவந்தனர். இதனால் மற்ற விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் நீதிமன்றம் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு