Published:Updated:

`டிக் டாக் மோகத்தால் பணம், நகையை இழந்துவிட்டேன்!- சிவகங்கை பெண் கண்ணீர்

`செவிலியருக்குப் படித்துள்ளேன். இதிலிருந்து மீண்டு பணியில் ஈடுபடுவேன்' என்று வினிதா தெரிவித்துள்ளார்.

வினிதா மற்றும் அபி
வினிதா மற்றும் அபி

``நகையைத் தோழிக்குக் கொடுத்தது உண்மைதான்'' என்று போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ள டிக்டாக் வினிதா, தற்போது மனமாற்றமடைந்து தன் குடும்பத்தோடு செல்ல உள்ளார். அதற்காக வினிதாவிற்கு அவரது தாயாரும், காவல்துறை அதிகாரிகளும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

கணவருடன் வினிதா
கணவருடன் வினிதா

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியலியோவின் மனைவி வினிதா டிக் டாக் மோகத்தால் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு வெளியேறியதாக அவரின் தாயார் அருள்ஜெயராணி, திருவேகம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் வினிதா அவரது டிக் டாக் தோழி அபியுடன் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பெண்ணுடன் டிக்டாக்... நகையுடன் மாயமான மனைவி..! - வீடியோவை பார்த்துப் பதறிய கணவர்

இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று வினிதா, `தான் எங்கேயும் ஓடவில்லை. வீட்டிலிருந்து நகைகளை எடுக்கவில்லை' என வீடியோ வெளியிட்டு சிவகங்கை காவல்நிலையத்தில் ஆஜரானார். அப்போது போலீஸாரின் கிடுக்குப்பிடி கேள்வியால் வினிதா மாட்டிக்கொண்டார். ``அக்காவின் நகைகளை எடுத்துள்ளேன். அதைத் தனது தோழி கேட்டதால் கொடுத்துவிட்டேன்'' என்று வினிதா தெரிவித்தார். தற்போது வினிதாவுக்கு தேவகோட்டை மகளிர் காவல்நிலையத்தில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

வினிதா
வினிதா

அப்போது வினிதா, ``டிக் டாக் மோகத்தால் நான் தேவையற்ற விசயங்களில் மாட்டிக்கொண்டு பணத்தையும் நகையையும் இழந்துவிட்டேன்'' என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். வினிதாவின் தாயார் அருள்ஜெயராணி, அவரிடம் இனிமேல் டிக் டாக் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகிறாராம். இது குறித்து தேவகோட்டை பகுதி காவல் ஆய்வாளர் அந்தோணி செல்லதுரையிடம் கேட்டபோது, ``வினிதா தொடர்பான புகாரில் தனிக்கவனம் செலுத்தி விசாரித்து வருகிறோம். தனது தோழியிடம் கொடுத்ததாகச் சொல்லப்படும் நகையை விரைவில் மீட்டு அவரிடம் ஒப்படைப்போம். எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி. ஆகியோரின் உத்தரவின் பேரில் வினிதாவிற்குப் பெண் காவலர்கள் மூலம் ஆலோசனை வழங்கினோம். `செவிலியருக்குப் படித்துள்ளேன். இதிலிருந்து மீண்டு பணியில் ஈடுபடுவேன்' என்று வினிதா தெரிவித்துள்ளார்" எனக் கூறினார்.