Published:Updated:

`300 வருடங்களாக அப்படியே நிற்கிறது; புயல் வந்தாலும் விழாது!'‍- பிரமிக்கவைக்கும் `ஆகாசப் பாறை`

காற்றில் கரையும் 'ஆகாச பாறை', காண்போரை ஆஹா சொல்ல வைக்கிறது.

 ஆகாச பாறை
ஆகாச பாறை ( அருண் சின்னதுரை )

சிவகங்கை மாவட்டம், ஏரியூர் கிராமத்தில் உள்ள வனப் பகுதியில் 'ஆகாச பாறை' உள்ளது. இந்தப் பாறையை சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகாச பாறை
ஆகாச பாறை

இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷிடம் பேசினோம். "ஏரியூர் கிராமம், செட்டிநாடு மணம் வீசும் கிராமம். இங்குள்ள பிரமாண்ட வீடுகள் மிகவும் நேர்த்தியாக இருக்கும். ஏரியூர் கிராமத்திலிருந்து தெற்கே செல்லும் வனப்பகுதியில்தான் ஆகாசப் பாறை அமைந்துள்ளது. காற்றில் சிதைவடையும் பாறை என்றும் இது சொல்லப்படுகிறது. 15 டன் முதல் 30 டன் வரை எடை இருக்கலாம்.

கையளவு நுனிப் பகுதியில்தான் இந்தப் பாறை பெரிய எடையைத் தாங்கிநிற்கிறது. பெரிய பாறை சிதைவடைந்து, இரண்டு செங்குத்துப் பாறைகள் தொங்கி நிற்பதுபோல் தென்படும். இதன் அடியில் நிற்கும்போது, உருண்டு விழுந்துவிடுமோ என்ற அச்சம் உருவாகும். அந்த அளவுக்கு பாறை தொங்கிக்கொண்டு நிற்கிறது.

விலங்குவடிவம் கொண்ட பாறை
விலங்குவடிவம் கொண்ட பாறை
அருண் சின்னதுரை

ஆனால், புயலே வந்தாலும் இந்தப் பாறை அசையாது. இதே நிலையில் 300 வருடங்களுக்கும் மேலாக நிற்பதாகச் சொல்கிறார்கள். இது தவிர 2000 வருடங்கள் பழைமையான வெள்ளைக் கல் பொட்டல் என்னும் ஈமக்காடும், மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.

ஏரியூர் மருதீஸ்வரர் கோயிலின் தெற்குத் தொடராக இது இருக்கிறது. அமைதியான சூழல் நிலவும் இந்த இடம் ரம்யமாகக் காட்சியளிக்கும். இதன் அருகிலேயே நரிக் குகையும் அமைந்துள்ளது. நரிக்குகை, கோடைகாலத்திலும் குளிர்ச்சியை வெளிப்படுத்தும்.

ஆகாச பாறை
ஆகாச பாறை
ஜெமினி ரமேஷ்

இதன் அருகில், எப்போதும் வற்றாத சுனை ஒன்று உள்ளது. ஆகாசப் பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஒவ்வொரு பாறையும் விலங்கு போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அழகிய பாறைகளைச் சுற்றுலா இடமாக மாற்றலாம்" என்றார்.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பைத் தொடர்ந்து அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறைப் பகுதியைப் பார்வையிட கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

நரிக் குகை
நரிக் குகை

அதைப் போலவே, ஏரியூர் பகுதியில் உள்ள ஆகாசப் பாறையைச் சுற்றியும் மேம்படுத்தினால், அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'300 வருடங்களாக அப்படியே நிற்கிறது; புயல் வந்தாலும் விழாது!'‍- பிரமிக்கவைக்கும் 'ஆகாசப் பாறை' | #Sivagangai முழு விவரம் : http://bit.ly/2J66Xx2

Posted by Vikatan EMagazine on Monday, October 21, 2019