Published:Updated:

`அடிமைத்தனம் எந்த உருவிலும் இருக்கக் கூடாது!' - கொத்தடிமை ஒழிப்பு தினத்தில் முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

`கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புநாளில், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சந்தித்து, அவர்கள் உழைப்பால் உருவாக்கியவற்றை எனக்கு வழங்கினர்.' - ஸ்டாலின்

கொத்தடிமை தொழிலாளர் முறையை முழுவதுமாக அகற்றிடவும், தமிழகத்தைக் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ``கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புநாளில், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சந்தித்து, அவர்கள் உழைப்பால் உருவாக்கியவற்றை எனக்கு வழங்கினர். அவர்களுக்கு என் அன்பை வழங்கினேன். அவர்களது நலன் என்றும் காக்கப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism