Published:Updated:

ஈரோடு: மாட்டுச் சாணம் ஏற்றிச் சென்ற லாரி... சோதனையில் சிக்கிய 2 டன் போதைப்பொருள்கள்!

சோதனையில் சிக்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள்

மொத்தம் 70 மூட்டைகளில் 2 டன் அளவுக்கு குட்கா, போதைப்பாக்கு பொட்டலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது போலீஸாரால் கண்டறியப்பட்டது.

ஈரோடு: மாட்டுச் சாணம் ஏற்றிச் சென்ற லாரி... சோதனையில் சிக்கிய 2 டன் போதைப்பொருள்கள்!

மொத்தம் 70 மூட்டைகளில் 2 டன் அளவுக்கு குட்கா, போதைப்பாக்கு பொட்டலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது போலீஸாரால் கண்டறியப்பட்டது.

Published:Updated:
சோதனையில் சிக்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள்

ஈரோடு மாவட்டம், பண்ணாரி என்ற ஊரில் அமைந்திருக்கும் பண்ணாரி மாரியம்மன் கோயில் பகுதியில் சத்தியமங்கலம் போலீஸார், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசனூர் வழியாக சத்தியமங்கலம் நோக்கி மாட்டுச் சாணம் ஏற்றிய பிக்-அப் வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. அதை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர்.

அந்த வேனை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது தனது பெயர் சிராஜ்  (31) என்றும், கர்நாடக மாநிலம், குண்டல்பேட்டையிலிருந்து மாட்டுச்சாணம் ஏற்றிக்கொண்டு அன்னூருக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் கூறினார்.
முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீஸார், அவருடைய வாகனத்தைச் சோதனையிட்டபோது, மாட்டுச் சாணத்துக்கு அடியில் சில மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

சோதனையில் சிக்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள்
சோதனையில் சிக்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள்

உடனடியாக மேலே இருந்த சாணத்தை அகற்றிவிட்டு மூட்டைகளைப் பிரித்து சோதனையிட்டபோது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கு பொட்டலங்களும், போதைப் புகையிலையான ஹான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் போதை வஸ்துகளும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மொத்தம் 70 மூட்டைகளில் 2 டன் அளவுக்கு குட்கா, போதைப்பாக்கு பொட்டலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர்.

கடத்திவரப்பட்ட போதைப்பொருள்கள்
கடத்திவரப்பட்ட போதைப்பொருள்கள்

இதை கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையிலிருந்து அன்னூருக்குக் கடத்திச் செல்வதையும், அங்கிருந்து கோவை, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களுக்கு சப்ளை ஆவதையும் சிராஜ் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரைக் கைதுசெய்த போலீஸார், குட்கா மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

பண்ணாரியில் வனத்துறை சார்பிலும், வணிகவரித்துறை சார்பிலும் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த சோதனைச்சாவடியில் ரூ.100 கொடுத்துவிட்டே பிடிபட்ட பிக்-அப் வேன் கடந்துவந்ததாக சிராஜ் போலீஸாரிடம் தெரிவித்தார். இன்னும் எத்தனை லட்சம் மதிப்பிலான குட்கா, போதைப் புகையிலை இந்த வழியாக கடத்தப்படுகின்றனவோ என்பதைத் தமிழக அரசுதான் கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.