Published:Updated:

தலையில்லா பொம்மைக்கு சவுக்கடி; `பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷமிட்டு வீடியோ- இளைஞர் கைதின் பின்னணி என்ன?

பேனர், சவுக்கடி, பிரகாஷ் பேசும் வீடியோ காட்சி

காவல்துறையைக் கண்டித்து, தலையில்லா பொம்மைக்குச் சவுக்கடி கொடுத்து வீடியோ வெளியிட்ட நபர், கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி வீடியோ வெளியிட்டதாகக் கூறி தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

தலையில்லா பொம்மைக்கு சவுக்கடி; `பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷமிட்டு வீடியோ- இளைஞர் கைதின் பின்னணி என்ன?

காவல்துறையைக் கண்டித்து, தலையில்லா பொம்மைக்குச் சவுக்கடி கொடுத்து வீடியோ வெளியிட்ட நபர், கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி வீடியோ வெளியிட்டதாகக் கூறி தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
பேனர், சவுக்கடி, பிரகாஷ் பேசும் வீடியோ காட்சி

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ``இன்றைய தினம் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நம் பங்காளி நாடான பாகிஸ்தானியர்கள் வாழ்க. பாகிஸ்தான் ஜிந்தாபாத். ஏனெனில், ஆதிதிராவிட சமூக மக்களுக்கு வட்டமேசை மாநாட்டில் 140 இடங்கள் வேண்டும் என்று கூறி அம்பேத்கரை அழைத்துச் சென்ற முகமது அலி ஜின்னாவின் நினைவை நான் போற்றுகிறேன். இன்று 140 ஆதிதிராவிடர்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கிறீர்கள்.

வீடியோவில் பேசும் வளவனூர் பிரகாஷ்
வீடியோவில் பேசும் வளவனூர் பிரகாஷ்

அந்த இட ஒதுக்கீட்டை வாங்கிக் கொடுப்பதற்கு உறுதுணையாக இருந்தது முகமது அலி ஜின்னாதான். எனவே, பங்காளி நாடு வாழ வேண்டும் என நான் நினைக்கிறேன். 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என இந்தியாவிலிருந்து சொன்னால் எந்தச் சட்டப் பிரிவிலிருந்து கைதுசெய்யும் காவல்துறை... பங்காளி நாடு பாகிஸ்தான் வாழ்க என்பது ஒரு தேசியக் குற்றமா... முடிந்தால் வழக்கு போடட்டும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி" என்று பேசியிருக்கிறார். 

இந்த நிலையில், விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க உறுப்பினர் லட்சுமணனின் 50-வது பிறந்தநாள் விழா கடந்த 30-ம் தேதி அவருடைய ஆதரவாளர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எனவே, அவரை வாழ்த்தி விழுப்புரம், வளவனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரமாகப் பல்வேறு பேனர்கள் புதியதாக உதயமாகி இருந்தன. பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த அந்த பேனர்களை அகற்றும்படி பிரகாஷ் காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்தாராம். ஆனால், காவல்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ லட்சுமணனுக்கே போனைப் போட்டு, வளவனூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட பேனர்களை எடுக்கும்படி கூறியிருக்கிறார்.

எம்.எல்.ஏ லட்சுமணன் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பேனர்கள்
எம்.எல்.ஏ லட்சுமணன் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பேனர்கள்

மேலும், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வைக்கப்பட்ட பேனர்களும் அகற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலையில்லா பொம்மைக்குச் சவுக்கடி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் பிரகாஷ். காவல்துறையைக் கண்டித்து வெளியிடப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் வீடியோவைப் பதிவிட்டதாக பிரகாஷை இன்று கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கின்றனர் வளவனூர் போலீஸார்.

அவர்மீது, 153, 504, 505 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.