Published:Updated:

`பட்டுக்கோட்டையில் ஊரடங்கு கிடையாதா?!' -போலீஸாரின் அலட்சியத்தால் கலங்கும் சமூக ஆர்வலர் #corona

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

சாலைகளில் சுற்றித்திரிபவர்களைத் தடுத்துநிறுத்தி கேள்வி கேட்கக்கூட, நகரின் பெரும்பாலான பகுதிகளில் காவல்துறையினரே இல்லை.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் மக்களின் நடமாட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த, பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஊரடங்கு தொடர்பான நடவடிக்கைகளில் பெரும் குறைபாடுகள் இருப்பதாகவும், இதனால் இங்கு கொரோனா வைரஸ் பரவலுக்கான சூழல் அதிகரித்திருப்பதாகவும் இப்பகுதி மக்கள் கவலைப்படுகிறார்கள்.

வீரசேனன்
வீரசேனன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரசேனன், ‘’எங்க ஊர்ல கொரோனா ஊரடங்கு இருக்கா, இல்லையான்னு சந்தேகப்படுற அளவுக்கு நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. சாலைகளில் மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் நிறைஞ்சு காணப்படுது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரோ... ரொம்பவே மெத்தனமா இருக்காங்க.

தமிழ்நாட்டுல வேற எங்கேயுமே இந்த அளவுக்கு மோசமான நிலை கிடையாது. மற்ற ஊர்களில் எல்லாம் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுறாங்க. சாலைகளில் சுற்றித் திரிபவர்களைப் பிடித்து, தோப்புக்கரணம் போடவைப்பது, திருக்குறள் சொல்லவைப்பதுனு விதவிதமான நூதன தண்டனைகள் கொடுக்குறாங்க. ஊரடங்கு விதியை மீறுபவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கு. ஆனால் பட்டுக்கோட்டையில், அதுமாதிரியான நடவடிக்கைகளே எடுக்கப்படலை. சாலைகள்ல சுற்றித்திரிபவர்களைத் தடுத்து நிறுத்தி கேள்விக் கேட்கக் கூட, நகரின் பெரும்பாலான பகுதிகளில் காவல்துறையினரே இல்லை.

`மருந்து விஷயத்தில் பின்தங்கியுள்ளோம்.. கொரோனா வைரஸ் செம ஸ்மார்ட்!’ -  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

மணிக்கூண்டு பகுதியில் மட்டும் காவல்துறையினர் நின்னுக்கிட்டு, முகக்கவசம் அணியுங்க, கையை நல்லா கழுவுங்கன்னு அறிவுறுத்தக்கூடிய ஆடியோவை ஸ்பீக்கர்ல ஒலிக்கவிடுறாங்க. அவ்வளவுதான். ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் எல்லாம், ரோட்டுல யார், எப்படி போனால் நமக்கென்னன்னு எதையும் கண்டுக்காம இருக்காங்க. இவங்க எல்லாம், பல ஆண்டுகளாக இங்கயே வேலைபார்க்கக்கூடிய உள்ளூர்க்காரங்க. நமக்கு ஏன் வம்பு, வருத்தம் வந்துடுமோன்னு ஒதுங்கியிருக்காங்க.

இவங்களை கேள்விக் கேட்கவும் உத்தரவுகள் போட்டு வேலை வாங்கவும், பட்டுக்கோட்டையில் இப்ப டிஎஸ்பி இல்லாததாலதான், இவ்வளவு பெரிய குறைபாடு. பட்டுக்கோட்டையில் டிஎஸ்பி-யாக இருந்தவர், இரண்டு மாசத்துக்கு முன்னாடி ஓய்வுபெற்றுவிட்டார். அதுக்குப் பிறகு இங்க இன்னும் டிஎஸ்பி-யே நியமிக்கப்படலை.

ஊரடங்கு நேரத்துலயும்கூட இங்க மக்கள் போக்குவரத்து அதிகமா இருக்க இது ஒரு முக்கியமான காரணம். பட்டுக்கோட்டையில அரசுக்குச் சொந்தமான சந்தை கிடையாது. தனியாருக்கு சொந்தமான இடத்துலதான் சந்தை இயங்கிக்கிட்டு இருந்துச்சு. அவங்க சந்தையை மூடிட்டாங்க. இதனால் அண்ணா சிலையிலிருந்து அஞ்சலகம் வரைக்கும் சாலையோரங்களில் காய்கறிகள், மீன், கோழி இறைச்சிக் கடைகள் இப்ப உருவாகியிருக்கு. இவங்களுக்கு எந்த ஒரு நேரக்கட்டுப்பாடுகளும் இல்லை. மக்கள் கூட்டம் நிரம்பி வழியுது.

கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா? 
#DoubtOfCommonman

சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவே இல்லை. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, ஊரடங்கு முடியுற வரைக்கும் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்துல, நகராட்சி நிர்வாகமே, தற்காலிக சந்தை நடத்தலாம். இது மிகப்பெரிய மைதானம். எவ்வளவு கூட்டம் வந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர், நீண்ட தூரத்துல சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியும். இதுக்கு 10 வாயில்கள் இருக்கு. நகராட்சி நிர்வாகமே சந்தை நடத்தினால்தான், ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் திறந்து வச்சு, கடும் கட்டுப்பாடுகளோடு இதைச் செயல்படுத்த முடியும்” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு